10.
இளைய துணையாகிய புதல்வராகிய நல்ல செல்வத்தைப் பெற்ற.
11. மு.
பதிற். 90 : 48. 11-3. தொழில்வளம் பொருந்திய சிலம்பையும்,
அடங்கிய கொள்கையையும், நிறைந்த அறிவையும் உண்டாகிய புகழையும்,
ஒள்ளிய நெற்றியையும் உடைய மகளிர் ஊடலாற்சினந்து பார்த்த பார்வைக்கு
அஞ்சுதலைக் காட்டிலும், குடைச்சூல் - புடைதாழ்த்தல்; புடைபட்டு
உட்கருவை யுடைத்தாதல்; குடைபடுதல்' (சிலப்.
16 : 118. அரும்பத;
அடியார்.)
14-5. இரவலரது
துன்பத்தை அஞ்சுகின்ற, நம் குடியைப் புரத்தலை
ஏற்றுக்கொள்வோனைக் கண்டுவருதற்பொருட்டு. கண்டனம் வரற்கு (15) விறலி,
செல்லாமோ (6) என முடிக்க.
(பி
- ம்.) 3. புலக்களத்தோனே. 11. குடச்சூல். 13. துணித்த. (7)
58.
|
ஆடுக
விறலியர் பாடுக பரிசிலர்
வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர்
வாண்முகம்பொறித்த மாண்வரி யாக்கையர்
செல்லுறழ் மறவர்தங் கொல்படைத் தரீஇயர் |
5
|
இன்றினிது
நுகர்ந்தன மாயி னாளை
மண்புனை யிஞ்சி மதில்கடந் தல்ல
துண்குவ மல்லேம் புகாவெனக் கூறிக்
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய்படு பறியா வயங்குசெந் நாவின் |
10
|
எயிலெறி
வல்வி லேவிளங்கு தடக்கை
ஏந்தெழி லாகத்துச் சான்றோர் மெய்ம்மறை
வான வரம்ப னென்ப கானத்துக்
கறங்கிசைச் சிதடி பொரியரைப் பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும் |
15
|
புன்புலம் வித்தும வன்கை வினைஞர்
சீருடைப் பல்பக டொலிப்பப பூட்டி
நாஞ்சி லாடிய கொழுவழி மருங்கின்
அலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - ஏவிளங்கு தடக்கை (10)
(ப
- ரை) 2.
வெண்டோடு - பனந்தோடு; தோட்டின் கண்ணென
விரிக்க. அசைத்தல் - தங்குவித்தல். 3. வாண்முகம் - வாள்வாய்.
குவளையர்
(2) என்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று; அதனைக்
கூறி (7) என்பதனொடு முடிக்க.
|