பக்கம் எண் :

169

யாக்கையராகிய (3) மறவர் (4) என இருபெயரொட்டு.

     8. கண்ணி கண்ணுதல் - தாங்கள் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ப
வினைசெயக் கருதுதல்.

     10. 1எயிலெறி வல்விலென்றது விற்படையினை. ஏ விளங்கு தடக்கை
யென்றது ஏத்தொழிலுக்குள்ள கூறுபாடெல்லாம் விளங்கிய தடக்கை
யென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'ஏ விளங்கு தடக்கை' என்று பெயராயிற்று.

     14. பெரிய தோன்றுமென்றது பெருகத் தோன்றுமென்றவாறு.

     16. பல்பகட்டையென விரித்துப் பகட்டை அவை ஒலிப்பப் பூட்டியெனக்
கொள்க.

     பூட்டித் (16) திருமணி பெறூஉம் (18) என முடிக்க.

     வயவர் பெருமகன் (8) சான்றோர் மெய்ம்மறையாகிய (11) வான
வரம்பனைப் (12) புன்புலம் வித்தும் வன்கை வினைஞர் தம் (15) கொழுவழி
மருங்கின் (17) திருமணி பெறும் (18) நாடுகிழவோன் (19) என்று
சொல்லுவார்கள் (12); அவன் அவ்வாறு செல்வக்குறையிலனாதலான்
அத்தரத்திற்கு ஏற்ப நமக்கு வேண்டுவன தருதலிற் குறையுடையனல்லன்;
வந்தமைக் கேற்ப விறலியராயுள்ளீர், ஆடலைக் குறையறச் செலுத்துமின்;
பரிசிலராயுள்ளீர், நீயிரும் நும் கவிகளைப் பாடிக் கைவரப் பண்ணுமின் (1)
என்று மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

     வானவரம்பன் (12) நாடுகிழவோன் (19) எனக் கூட்டவேண்டுதலின்
மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவனாட்டுச் செல்வமும் அதற்கேற்ற அவன்
கொடையும் கூறியவாறாயிற்று.

     ஆடுக பாடுகவென்றதற்கு அவன்பாற்சென்று ஆடுக பாடுகவெனக்
கூறாது இவ்வாறு கூறியதன் கருத்து, 2ஆற்றுப்படையென்னாது 3செந்துறைப்
பாடாணென்று கிடந்தமையானெனக் கொள்க.

     (கு - ரை) 1. விறலியரே ஆடுக; பரிசிலரே பாடுக.

     2-4. பகைவரது இயல்பு.

     2. வெள்ளிய பனந்தோட்டிலே தொடுத்துக் கட்டிய ஒள்ளிய பொலிவு
பெற்ற குவளைப்பூவைச் சூடியவராய். பூக்களைப் பனந்தோட்டிலே தொடுத்தல்:
"வேங்கை யொள்ளிணர் நறுவீப், போந்தையந் தோட்டிற் புனைந்தனர்
தொடுத்து" (புறநா.265 : 2 - 3)

     3. வாளினது வாய் தன் அடையாளத்தை எழுதிய மாட்சிமைப் பட்ட
தழும்புகளையுடைய உடம்பினராகிய. மு. பதிற். 67 : 14.

     4. இடியை ஒத்த மறவரது கொல்லுகின்ற படையைக் கொணரும்
பொருட்டு. 5 - 7. வயவரது வஞ்சினம்.

     5. இன்றைக்கு இனிதாக நுகர்ந்தோமானால் நாளைக்கு.

     6. அரைத்த மண்ணால் கட்டப்பட்ட இஞ்சியையுடைய மதிலைக்
கடந்தல்லாமல்; 'அரைம ணிஞ்சி நாட்கொடி நுடங்கும்' (புறநா.341 : 5)


     1'படைவெள்ளத்தை ஆரெயிலென்றது அரசன்றனக்கு ஆரெயில் போல
அரணாய் நிற்றலினெனக் கொள்க' (
பதிற். 33: 6 - 11, உரை)

     2தொல். புறத். 36.

     3பதிற். 11. துறை.