பக்கம் எண் :

170

     7. புகா உண்குவம் அல்லேம் எனக்கூறி - உணவை உண்ணமாட்டேம்
என்று வஞ்சினம் கூறி; இது தொல்லெயிற்கிவர்தலென்றும் முற்றுமுதிர்வென்றும்
கூறப்படும்; "இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப், பொற்றாரான்
போனகங்கைக் கொள்ளானால்" (தொல், புறத். 12, ந. மேற்.)' "காலை முரச
மதிலியம்பக் கண்கனன்று, வேலை விறல்வெய்யோ னோக்குதலும் - மாலை,
அடுக மடிசிலென் றம்மதிலு ளிட்டார், தொடுகழலார் மூழை துடுப்பு" (பு. வெ.
117)

     8. தாம் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ற வினைசெய்யக் கருதிய
வீரர்களையுடைய பெருமையையுடையான். 9. தாம் கூறிய வஞ்சினங்கள்
பொய்படுதலை அறியாதனவாய் விளங்குகின்ற செவ்விய நாவினையும்.

     10. மதில்களை எறிகின்ற வல்வில்லின்கண்ணே அம்புகளைத்
தொடுத்தற்குரிய கூறுபாடுகளெல்லாம் முற்றக் கற்று விளங்கிய பெரிய
கையினையும்; எயிலெறி வல்வில் என்றது, விற்படையொன்றனையே
துணையாகக் கொண்டு பகைவர் மதிலைப் கொள்ளுவரென்றபடி.

     11. சான்றோர் மெய்ம்மறை: பதிற். 14 : 12.

     11-2. அழகை எய்திய மார்பினையும் உடைய வீரருக்குக் கவசம்
போன்றவனாகிய வானவரம்பனென்று அறிந்தோர் சொல்லுவர்.

     12-5. புன்புலத்தின் இயல்பு.

     12-4. காட்டினிடத்தே ஒலிக்கின்ற ஓசையையுடைய சிள்வீடு பொரிந்த
அடிமரத்தின்கண்ணே பொருந்திய சிறிய இலைகளையுடைய வேலமரம்
பெருகத் தோன்றும்; சிறிய இலை சிறியிலையென்றாயிற்று; தொகுத்தல்;
"சிறியிலை வெதிரின்" (புறநா. 109 : 4). சிதடி: பதிற். 23:2.

     15. புன்புலத்தில் வித்துக்களை விதைக்கின்ற வலிய கையையுடைய
தொழில்செய்வோர். 16. சிறப்பையுடைய பல கடாக்களை அவை ஒலிக்கும்படி
நுகத்தின் கண்ணே பூட்டி உழுதலால். பூட்டி: எச்சத்திரிபு.

     17. கலப்பைகள் உழுத கொழுவினது படைச்சாவின் பக்கத்தே.

     18-9. அசைகின்ற ஒளியையுடைய அழகிய மணியைப் பெறுவதற்கு
இடமான, அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய நாட்டுக்கு
உரிமையுடையோனை.

     காட்டில் மணிபெறுதல்:பதிற். 21 : 20 - 22, 66 : 19 - 20,76:14-5.

     நாடுகிழவோனை (19) மெய்ம்மறையாகிய (11) வானவரம்பனென்ப
(12) என முடிவு செய்க.

     (பி - ம்) 7. புகவென. 9. படுவறியா, 11.மேமறை. 17.மருங்கில். (8)



59. பகனீ டாகா திரவுப்பொழுது பெருகி
மாசி நின்ற மாகூர் திங்கட்
பனிச்சுரம் படரும் பாண்மக னுவப்பப்
புல்லிருள் விடியப் புலம்புசே ணகலப்
5 பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி
ஞாயிறு குணமுதற் றோன்றி யாஅங்
கிரவன் மாக்கள் சிறுகுடி பெருக