பக்கம் எண் :

171

  உலகந் தாங்கிய மேம்படு கற்பின்
வில்லோர் மெய்ம்மறை வீற்றிருங் கொற்றத்துச்
 10 செல்வர் செல்வ சேர்ந்தோர்க் கரணம்
அறியா தெதிர்ந்து துப்பிற் குறையுற்றுப்
பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற்
சினஞ்செலத் தணியுமோ வாழ்கநின் கண்ணி
பல்வேறு வகைய நனந்தலை யீண்டிய
 15 மலையவுங் கடலவும் பண்ணியம் பகுக்கும்
ஆறுமுட் டுறாஅ தறம்புரிந் தொழுகும்
நாடல் சான்ற துப்பிற் பணைத்தோட்
பாடுசா னன்கலந் தரூஉம்
நாடுபுறந் தருத னினக்குமார் கடனே.

     இதுவுமது. பெயர் - மாகூர் திங்கள் (2)

     (ப - ரை) நீடாகாது பெருகி (1) என நின்ற பகலிரெவென்னும்
சினைமேல் வினையெச்சம் மாசி நின்ற (2) என்னும் தம் முதலது வினையொடு
முடிந்தன.

     2. மாசியென்றது மாசித்தன்மையை. இனி, அவ்வெச்சங்களைத்
திரிப்பினும் அமையும். மா 1கூர்தல் - மாக்கள் குளிராலே உடல் வளைதல்.

     இச்சிறப்பானே இதற்கு, 'மாகூர் திங்கள்' என்று பெயராயிற்று.

     திங்கள் - மாதம். 4. புலம்பு - உலகத்து உயிர்கள் புலம்பு.

     13. சினஞ்செலத் தணியுமோவென்றது நின்பாற் சினமானது
நின்பால்நின்றும் கையறப்போம்படி சிறுகத் தணிவுபிறக்குமோவென்றவாறு.

     இனி, உம்மும் ஓவும் அசையாக்கித் தணியென்பதனை முன்னிலை
வினையாக்கி உரைப்பாரும் உளர்.

     14. நனந்தலையென்றது பரமண்டலங்களை.

     ஈண்டிய (14) பண்ணியம் (15) என்றது, அம்மண்டலங்களில் தன் பகைவர்
பால் ஈண்டிய பண்டங்களை.

     15. மலையவும் கடலவுமாகியவென ஒரு சொல் வருவிக்க.

     16. முட்டுறாமலெனத் திரிக்க. அறம்புரிதல் - நாடுகாவலாகிய அறத்திலே
மேவுதல்.

     15-16. பகுக்கும் ஆறென்றது அப்பண்ணியங்களைப் பலர்க்கும் பகுத்துக்
கொடுக்கும் நெறியென்றவாறு.

     17-8. தோட்கலனென்றது தோளிற்கேற்ற கலமென்றவாறு; தோட்குத்
தருமென்றுமாம். 19. மார்: அசை..

     வில்லோர் மெய்ம்மறை (9) செல்வ, சேர்ந்தோர்க்கரணம் (10), நின்


     1கூர்தல்: மந்திகூர - குரங்கு குளிர்ச்சிமிக; குன்னாக்க என்பாரும்
உளர்’; (
நெடுநல். 9, ந); “துவலையி னனைந்த புறத்த தயலது, கூரலிருக்கை
யருளி” (
நற். 181 : 6-7); “இறைமிசை, மாரிச் சுதையினீர்ம்புறத் தன்ன, கூரற்
கொக்கின் குறும்கறைச் சேவல்” (
அகநா, 346 : 1 - 3)