60.
|
கொலைவினை மேவற்றுத் தானை தானே
இகல்வினை மேவலன் றண்டாது வீசும்
செல்லா மோதில் பாண்மகள் காணியர்
மிஞிறுபுற மூசவுந் தீஞ்சுவை திரியா |
5
|
தரம்போழ்
கல்லா மரம்படு தீங்கினி
அஞ்சே றமைந்த முண்டை விளைபழம்
ஆறுசென் மாக்கட் கோய்தகை தடுக்கும்
மறாஅ விளையு ளறாஅ யாணர்த்
தொடைமடி களைந்த சிலையுடைய மறவர் |
10
|
பொங்குபிசிர்ப்
புணரி மங்குலொடு மயங்கி
வருங்கட லூதையிற் பனிக்கும்
துவ்வா நறவின் சாயினத் தானே. |
துறை
- விறலியாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர்
- மரம்படு தீங்கணி (5)
(ப
- ரை) 4. மிஞிறு புறமூசவும் தீஞ்சுவை திரியாமை அப்பழத்தின்
புறத்து வன்மையால்.
5.
அரம்போழ்கல்லாவென்றது புறத்து வன்மையால் அரிவாளும்
போழமாட்டாவென்றவாறு. 'அரம்போழ்கல்லாமரம்படு தீங்கனி' என்றது
1புறக்காழனவாகிய பனை முதலியவற்றின் தீங்கனியை நீக்குதற்கு.
இச்சிறப்பானும்
முன்னும் பின்னும் வந்த அடைச்சிறப்பானும் இதற்கு;
'மரம்படு தீங்கனி' என்று பெயராயிற்று.
6.
முண்டை விளைபழம் - முட்டைகள்போலும் விளைபழம்;
முட்டையென்றது 2மெலிந்தது.
மரம்படு
தீங்கனியாகிய (5) முட்டை விளைபழம் (6) என
இருபெயரொட்டு.
ஓய்தகை தடுக்கும்
(7) துவ்வா நறவு (12) எனக் கூட்டுக.
8.
அறாஅ யாணரென்றது இடையறா கடல்வருவாய் முதலாய
செல்வங்களை. 9. தொடைமடி - அம்புதொடுத்து எய்தலில் மடிதல்.
10.
புணரியொடு மங்குலொடு என ஒடுவை இரண்டிடத்தும் கொள்க.
மயங்கவெனத் திரிக்க; மயங்குவது வருகின்ற ஊதை (11) எனக் கொள்க.
மறவர்
(9) கடலூதையிற் பனிக்கும் (11) நறவு (12) எனக்கூட்டி,
ஆண்டுவாழும் மறவர் 3கடலூதையால் மட்டும் நடுங்கும் நறவென்க.
12. நறவு -
ஓரூர்; துவ்வா நறவு - வெளிப்படை.
அவன்றான்,
இப்பொழுது துவ்வாநறவின் சாயினத்தான் (12)
1“புறக்கா
ழனவே புல்லென மொழிப” (தொல்,
மரபு, 85)
2தொல்,
எச்ச. 7.
3“செஞ்ஞாயிற்றுத்
தெறவல்லது, பிறிதுதெற லறியார்நின்னிழல்
வாழ்வோரே” (புறநா.
20 : 8 - 9) என்பதனோடு ஒப்புநோக்குக.
|