பக்கம் எண் :

174

இனித்தானை கொலைவினை மேவற்று; ஆகலால் தான் (1) இகல்வினை
மேவலன்; இன்னபொழுது இன்னவிடத்து எழுமெனத்தெரியது (2); பாண்மகளே,
நாம் அவனைக் காணியர் செல்லாமோ; செல்லின் (3), தண்டாது வீசும் (2)
எனக் கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்போடு வென்றிச் சிறப்பும்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. சேரனது சேனை கொலையாகிய தொழிலை
விரும்புதலையுடையது.

     1-2. சேரன்தான், போராகிய வினையை விரும்புதலையுடையனாகி
அவ்விடத்தே பெற்ற அரியபொருள்களை ஓரளவில் அமையாது கொடுப்பான்.

     3. விறலி, ஆதலால் அவனைக் காணும்பொருட்டுப் போதலை
விரும்புவோமா; தில்: விழைவுப்பொருளில் தன்மையிடத்து வந்தது.

     4-5. வண்டுகள் நறுமணத்தால் புறத்தே மொய்க்கவும் தம் இனிய சுவை
மாறுபடாமல், புறத்து வன்மையால் அரிவாளும் பிளத்தற்கு இயலாத மரங்களில்
விளைந்த இனிய பழங்களாகிய.

     6. அழகிய சாறு நிரம்பிய, முட்டைபோல முதிர்ந்த பழங்கள்; முட்டை:
இங்கே பலாப்பழத்தின் வடிவிற்கு உவமை; அஞ்சேறு என்பதற்கு ஏற்ப
முட்டை முண்டை என்றாயிற்று; மெலித்தல் விகாரம்.

     7. வழியிலே செல்லுகின்ற மக்களுக்கு, நடந்து செல்லுதலால் உண்டான
ஓய்ந்த தன்மையைத் தடுக்கும்; அறத்தின்பொருட்டு வழிச் செல்வோர்
உண்ணும்படி பழமரங்களை வளர்த்தல் மரபு; "அறந்தலைப்பட்ட நெல்லியம்
பசுங்காய்" (குறுந். 209 : 1); நெடுஞ்சேண் வந்த நீர்நிைசை வம்பலர்,
செல்லுயிர் நிறுத்த சுவைக்காய் நெல்லி” (அகநா, 271 : 6 - 7).

     8. மறாஅ விளையுள் - முற்காலத்து விளைந்தேனென மறுக்காத
நிலத்தின் விளைவையும்; "தொல்லது விளைந்தென நிலம்வளங் கரப்பினும்,
எல்லா வுயிர்க்கு மில்லால் வாழ்க்கை" (புறநா.203 : 2 - 3). அறாஅ யாணர்
- இடையறாமல் வருகின்ற ஏனைய புதுவருவாய்களையும் உடைய.

     தடுக்கும் (7) யாணர்த் (8) துவ்வாநறவு (12) என இயையும்.

     9. அம்புகளைத் தொடுத்து எய்தலால் மடிதலைக் களைந்த
வில்லையுடைய மறவர். 10. பொங்குகின்ற பிசிரையுடைய அலைகளோடும்
மேகங்களோடும் கலந்து. மங்குலொடு என்பதிலுள்ள ஒடுவைப் புணரி
யென்பதனோடும் கூட்டுக.

     11. வருகின்ற கடலினது குளிர்ந்த காற்றால் உடல் நடுங்குகின்ற; என்றது
அம்மறவர், சேரனது வன்மைகாரணமாக, பகைவருக்கு நடுங்குதல்
இலரென்றபடி.

     12. உண்ணப்படாத நறவென்னும் ஊரின்கண்ணே, மென்மையையுடைய
மகளிரினத்திடையேயுள்ளான். சாயினம் - மெல்லிய மகளிராயம்; இவர்
பாட்டாலும், கூத்தாலும், வார்த்தையாலும் சேரனுக்கு மகிழ்ச்சி செய்யும்
மகளிர்; "இன்னகை யாயமோ டிருந்தோற் குறுகி" (சிறுபாண். 220)

     இதன் பதிகத்துத் தண்டாரணியம் (3) என்றது ஆரிய நாட்டிலே
உள்ளதோர் நாடு. கபலை (5) என்றது குராற்பசு.