10.
படர்ந்தோனென்றது முற்று. அளிக்கென வென்றது நீ எம்மை
அளிப்பாயாகவெனச் சொல்லியென்றவாறு.
11. இரக்கென்றது
தன்மைவினை. எஞ்சிக் கூறேனென்றது உண்மையின்
எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்துசொல்லேனென்றவாறு.
12. ஈத்தற்கென
நான்காவது விரிக்க. ஈத்தொறு மகிழானென்றது
ஈயுந்தோறெல்லாம்தான் அயலாயிருத்தலல்லது ஈயாநின்றோ மென்று ஒரு
மகிழ்ச்சியுடையனல்லனென்றவாறு.
13, நுவலுமென்றதற்கு
உலகம் நுவலுமென வருவிக்க.
15. புலாஅம்
பாசறையென்றது வீரரெல்லாரும் போர்செய்து புண்பட்ட
மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறையென்றவாறு. இச்சிறப்பானே இதற்கு,
'புலாஅம் பாசறை' என்று பெயராயிற்று.
16. வேலையென
இரண்டாவது விரித்துப் பாடினியிற் பாடுதலொடு
முடிக்க. 17. வெண்கையென்றது பொருள்களை அபிநயிக்கும் 1தொழிற்கை
யல்லாத, வெறுமனே தாளத்திற்கு இசைய விடும்எழிற்கையினை.
18. கலிமகிழென்றது
கலிமகிழையுடைய ஓலக்கத்தை.
யான்பாரி (8)
சேட்புலம் படர்ந்தோன்; நீ அளிக்கவெனச் சொல்லி
(10) இரக்கென்று வந்து சில புகழ்ந்து சொல்லுகின்றேனுமல்லேன்; அஃதன்றி
உண்மையொழியப் புகழ்ந்து சொல்லுகின்றேனுமல்லேன் (11); ஈத்தற்கு
இரங்காமை முதலாகிய அப்பாரிகுணங்களை நின்பாலும் உளவாக (12) உலகம்
சொல்லும் நின் (13) புகழை நின்பாலே தர வந்தேன் (14), நின் பாசறையின்
கலிமகிழின்கண்ணே (18) என வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன்வென்றிச் சிறப்பொடு படுத்து அவன்
கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. பலாமரத்திற் பழுத்த, பசிய புண்பட்ட வாய்போல
வெடித்த பழத்திலிருந்து அரித்து விழுகின்ற தேனை; பலாப்பழுத்த
வென்பது மெலித்தல் விகாரம் பெற்றது. பழத்தின் வெடித்தவாய் புண்ணின்
வாய் போன்றிருத்தலால் பசும்புண் எனப்பட்டது; "புண்ணரிந், தரலையுக்கன
நெடுந்தா ளாசினி" "கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்" (மலைபடு.
138 - 9, 292)
2. காற்றானது
வீசுகின்ற பறம்புநாடு பொருந்திய பெருவிறலையுடையவன்.
3-4. சித்திரத்தைப்போன்ற
தொழில் புனைந்த நல்ல மனையின்
கண்ணேயுள்ள கொல்லிப்பாவையைப் போன்ற வடிவையுடைய நல்லோளுடைய
கணவன் (பதிற். 88 : 28 - 9);
"ஓவத் தன்ன விடனுடை வரைப்பிற் பாவை
யன்ன நப்புறங் காக்கும்" (நற். 182 :2-3);
"ஓவத்தன்ன வினைபுனை நல்லிற்,
பாவை யன்ன பலராய் மாண்கவின்" (அகநா.
98 : 11 - 2); "ஓவத்தன்ன
விடனுடை வரைப்பிற் பாவையன்ன குறுந்தொடி மகளிர்" (புறநா.
251 : 1 - 2)
நல்லோள் கணவன்:
பதிற். 14 : 15, உரை.
5-6. பொன்னைப்
போன்ற நிறத்தையுடைய பூவினையும் சிறிய
1தொழிற்கை
- தொழில்பெறக் காட்டும் கை : எழிற்கை - அழகு பெறக்
காட்டும் கை; “பிண்டியும் பிணையலு மெழிற்கையுந் தொழிற் கையும்” (சிலம்.
3 : 18) |