பக்கம் எண் :

178

இலைகளையும், பொலிவற்ற அடிமரத்தையும் உடைய உன்னமரத்துக்குப்
பகைவனாகிய எம்முடைய அரசன். உன்னத்துப் பகைவன்; பதிற்.40 : 17.
உரை.

     ஓடா உடல் வேந்தடுக்கிய உன்னநிலை (தொல். புறத். 5, ந.)

     7-8. பூசிப் புலர்ந்த சந்தனத்தையும் வற்றாத ஈகையையும் மகளிர்க்கு
மலர்ந்த மார்பினையும் பெரிய கொடையையுமுடைய பாரியென்பான்.

     பெருவிறல் (2) நல்லோள் கணவன் (4) எங்கோ (6) ஆகிய பாரி (8)
என்க.

     9. முழவு என்னும் வாத்தியம் தன்னிடத்தே பூசிய மார்ச்சனை
மண்காயவும் பரிசிலர் துன்பமடையும்; முழவு அழிய என்று கூறல்
இன்னாததாதலின், மண்புரை எனத் தகுதிபற்றிக் கூறப்பட்டது; என்றதன்
கருத்து அதனால் தொழில் கொள்வாரின்மையின் அது பயனிழந்ததென்பது.

     10. மீண்டு வாராத உயர்ந்த இடத்திற்குசு சென்றான்; நீ எம்மைக்
காப்பாற்றுக வென்று. அளிக்கென : தொகுத்தல்.

     11. இரப்பேனாகி வாரேன்; அதனால் நின்பெருமையைக் குறைத்துக்
கூறமாட்டேன்; "விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்..........கைம் முற்றலநின்
புகழே" (புறநா. 53 : 6 - 8)

     12-3. சேரனுடைய அருங்குணங்கள்.

     12. தான் ஈந்த பொருள்களைப் பற்றிக் கழிவிரக்கங் கொள்ளான்;
இரவலர்க்குக் கொடுக்குந்தோறும் தான் அயலாய் இருத்தலாக
நினைத்தலேயன்றித் தான் ஈகின்றதாக எண்ணி மகிழமாட்டான்.

     13-4. ஈயுந்தோறும் பெரிய கொடையையுடையவனென உலகத்தாரும்
புலவரும் சொல்லுகின்ற, உரையும் பாட்டுமாகிய நின்னுடைய நல்ல புகழ்
என்னை நின்னிடத்துச் செலுத்துதலால் வந்தேன்; "புகழ்சால் சிறப்பினின்
னல்லிசை யுள்ளி, வந்தன னெந்தை யானே........நின்னைக்கண்டால் வேண்டிய
வளவை" (புறநா.135 : 9 - 20)

     14-5. ஒள்ளிய வாளால் வெட்டப்பட்ட வன்மையையுடைய
களிறுகளையுடைய புலால் நாற்றம் வீசும் பாசறையிடத்து.

     16. நிலவைப் போன்ற வெள்ளிய வேலைப்பாடுகின்ற விறலி.

     17-8. முழவின் கண்ணே செலுத்திய தாளத்திற்கு இசையவிடும் எழிற்
கையையுடைய விழாவைப்போன்ற நின்னுடைய ஆரவாரத்தையுடைய
ஓலக்கத்தின் கண்ணே.

     கலிமகிழின்கண் (18) வந்திசின் (14) என முடிக்க.

     (பி - ம்.) 2. தூக்கும். 6. எங்கோன். 12. ஈதொறு. (1)

 

62. இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதியோடு
மழையென மருளு மாயிரும் பஃறோல்
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு
மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ
 5 வந்துபுறத் திறுக்கும் பசும்பிசி ரொள்ளழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும்