|
மடங்கல்
வண்ணங் கொண்ட கடுந்திறற்
றுப்புத்துறை போகிய கொற்ற வேந்தே |
10 |
புனல்பொரு
கிடங்கின் வரைபோ லிஞ்சி
அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி
வளனுடைச் செறுவின் விளைந்தவை யுதிர்ந்த |
15 |
களனறு
குப்பை காஞ்சிச் சேர்த்தி
அரிய லார்கை வன்கை வினைநர்
அருவி யாம்பன் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண் டோப்பும்
பாடல் சான்றவவ ரகன்றலை நாடே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமு தூக்கும் அது.
பெயர் - வரைபோ லிஞ்சி (10)
(ப
- ரை) 2. பஃறோலொடுவென்னும் ஒடு விகாரத்தால் தொக்கதாக்கி
விரிக்க.
5. புறத்திறுக்குமென்றதற்கு
நின் தானை புறத்திறுக்குமென வருவிக்க.
ஞாயிறு பல்கிய
மாயமொடு (6) உழிதரு (7) மடங்கல் (8) எனக்
கூட்டி உலகம் கடல்கொண்டு கிடந்த காலத்து அக்கடல் நீரெல்லாம் வற்ற
எறித்தற்குத் தோன்றும் ஆதித்தர் பலவான மாயத்தோடே கூடி அந்நீர்
வற்றும்படி திரிதரு வடவைத் தீயென்றுரைக்க.
மாயம் போறலான்
மாயமெனப்பட்டது.
சுடர்திகழ்பு
(6) ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரு (7) மடங்கல்
(8) என்றது சுடர் திகழ்ந்து உயிர்கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச்
செய்தலோடே ஒலித்துத் திரிதரும் மடங்கலென்றவாறு.
ஒள்ளழல் (5)
மடங்கல் வண்ணம் கொண்ட (8) எனக்கூட்டி,
ஒள்ளழலானது மடங்கலாகிய அழலின் வண்ணத்தைக் கொள்கைக்கு
காரணமாய் நின்றவெனவுரைக்க.
இனி ஞாயிறுபலவாதலை
(6) அவன் பகைவர் நாட்டில் 1உற்பாதமாகத்
தோன்றும் ஆதித்தர் பலராக்கி, மடங்கல் (8) என்றதனைக் கூற்ற மாக்கி,
சுடர்திகழ்பு என்றதனைத் திகழவெனத் திரித்து, ஒள்ளழலானது ஞாயிறு
பல்கிய மாயமொடு சுடர்திகழ மடங்கல்வண்ணங் கொண்ட வேந்தேயென
உரைப்பாரும் உளர்.
தடக்கையராகிய
(11) நின் பகைவர் (12) என மாறிக் கூட்டுக.
வரைபோல் இஞ்சியை
அரணாகவுடையராயிருந்தே (10) திறைதருப (12)
எனச் சொன்ன சிறப்பானே இதற்கு, 'வரைபோ லிஞ்சி'
என்று பெயராயிற்று.
1வெங்கதிர்க்கனலி
துற்றவும் - வெய்ய சுடரையுடைய ஞாயிறு
பலவிடத்தும் செறிந்து தோன்றவும்' (புறநா.
41 : 6, உரை) |