பக்கம் எண் :

18

பதிற்றுப்பத்து மூலமும்
பழைய உரையும்

* * * * * * *

பதிற்றுப்பத்தின் முதற்பத்தும் பத்தாம்பத்தும் சுவடி
பதிப்பித்த காலம் முதல் தற்போது வரை கிடைக்கவில்லை


                  இரண்டாம் பத்து

11. வரைமருள் புணரி வான்பிசி ருடைய
வளிபாய்ந் தட்ட துளங்கிருங் கமஞ்சூல்
நளியிரும் பரப்பின் மாக்கடன் முன்னி
அணங்குடை யவுண ரேமம் புணர்க்கும்
 5 சூருடை முழுமுத றடிந்த பேரிசைக்
கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்குச்
செவ்வா யெஃகம் விலங்குந ரறுப்ப
அருநிறந் திறந்த புண்ணுமிழ் குருதியின்
மணிநிற விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து
 10 மனாலக் கலவை போல வரண்கொன்று
முரண்மிகு சிறப்பி னுயர்ந்த வூக்கலை
பலர்மொசிந் தோம்பிய திரள்பூங் கடம்பின்
கடியுடை முழுமுத றுமிய வேஎய்
வென்றெறி முழங்குபணை செய்த வெல்போர்
 15 நாரரி நறவி னார மார்பிற்
போரடு தானைச் சேர லாத
மார்புமலி பைந்தா ரோடையொடு விளங்கும்
வலனுயர் மருப்பிற் பழிதீர் யானைப்
பொலனணியெருத்த மேல்கொண்டு பொலிந்த நின்