பக்கம் எண் :

180

     திறைதருபவாயின் (12) நாடு பாடல் சான்ற (19) எனக் கூட்டுக. சான்ற
(19) என்றது முற்று.

     14. விளைந்தென்றதனை விளையவெனத் திரிக்க. 15. களனறு
குப்பையென்றது களத்திற் கடாவிடுதற்றொழிலற்ற 1தூற்றுப்பொலியை.

     பரப்பி: (13) என்னும் வினையெச்சத்தினைச் சேர்த்தி (15) என்னும்
வினையொடு முடித்து, அதனை வரிவண்டோப்பும் (18) என்னும் வினையொடு
முடிக்க.

     18-9. வண்டோப்பு நாடென மாறிக் கூட்டுக.

     கொற்றவேந்தே (9) நின்பகைவர் (12) தோட்டி செப்பிப் (11) பணிந்து
திறை தருபவாயின் (12) அவர் அகன்றலைநாடு பாடல் சான்ற (19) என மாறிக்
கூட்டி வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1-9. சேரன் பகைவரை வெல்லுதல்.

     1. ஓடை முதலிய ஆபரணங்களை அணிந்து எழுகின்ற பலவாகிய
ஆண்யானைகளின் தொகுதியோடும்.

     2. மேகமென்று மயங்குதற்குக் காரணமான கரிய பெரிய பலவாகிய
கிடுகுபடையோடும்; தொழுதியோடு என்பதிலுள்ள ஒடுவைத்தோலொடு என்றும்
கூட்டுக. (பதிற். 52 : 5, உரை); "மழையுருவின தோல்பரப்பி" (புறநா. 16 : 2)
"புரைதவ வுயரிய மழைமருள் பஃறோல்" (மலைபடு. 377); "எயிலூர் பஃறோல்
போலச், சென்மழை தவழுமவர் நன்மலை நாட்டே" (நற். 197 : 11 - 2)

     3. அம்பு முதலியன பக்கரை முதலிய கலனையை அறுத்த
கத்திரிகையிட்டு நறுக்கின பிடரிமயிரையுடைய குதிரைப்படையோடும்;
"தோறுமிபு, வைந்நுனைப் பகழிமூழ்கலிற் செவிசாய்த், துண்ணா துயங்கு
மாசிந் தித்தும்" (முல்லைப். 72 - 4). மு. பதிற். 64 : 9.

     4. வன்மையையுடைய அரிய மதில்களைப் பக்கத்தே நெருங்கும்படி
வளைத்து. 5. வந்து அவ்விடத்தே நினது சேனை தங்கும்; தங்கும்: முற்று.
பசிய பிசிரையுடைய ஒளியையுடைய நெருப்பு.

     6. ஊழியினிறுதிக் காலத்தில் சூரியர்கள் பலவாகத் தோன்றி
மாயத்தோடு ஒளி திகழப்பெற்று. 7. உயிர்களுக்குப் பொறுத்தற்கு இயலாத
மயக்கத்தைச் செய்தலோடு ஒலியைச் செய்து திரிகின்ற.

     8. ஊழித்தீயின் வண்ணத்தைக் கொள்ளுதற்குக் காரணமான கடிய
திறலால்.

     5-8. ஒள்ளழல் மாயமொடு சுடர்திகழ்பு, மயலொடு, பாடிமிழ்பு, உழிதரு
மடங்கல் என முடிக்க. கொண்ட; காரணப் பொருளில் வந்த பெயரெச்சம்.

     9. பகைமையின் துறைகளெல்லாம் முற்ற முடித்த வெற்றியையுடைய
அரசே; "துப்புத்துறை போகிய துணிவுடை யாண்மை" (பதிற். 14 : 6). 8 - 9.
சேரனுக்கு வடவைத்தீ உவமை.

     10-11. தன்னிடத்துள்ள நீர் மதிலைப் பொருகின்ற அகழியினையும்



     1பொலி - நெற்குவியல்; "பகடூர் பிழிந்த பின்றைத் துகடப, வையுந்
துரும்பு நீக்கிப் பைதறக், குடகாற் றெறிந்த குப்பை" (
பெரும்பாண். 238 - 40)