மலையைப் போன்ற மதிலையும்
உடைய, தம் பகைவரை வருத்து தலையுடைய
பெரிய கையையுடையராய் வணக்கத்தைச் சொல்லி; "தோட்டியின் வணக்கம்
வேட்டவன் விரும்பி" (பெருங். 1.
45 : 64). தோட்டி வளைந்திருத்தலின்
வணக்கத்திற்குப் பெயராயிற்று. வரை போலிஞ்சி: பதிற்.
16 : 1, உரை.
12. நின்னுடைய
பகைவர் வணங்கித் திறை கொடுப்பாராயின்.
13. புல்லையுடைய
அகன்ற முல்லைநிலத்தில் பல பசுக்களைப் பரவச்
செய்து. மு. பதிற். 21 : 21.
14-5. வளப்பத்தையுடைய
வயல்களில் விளைந்த பயிர்களினின்றும்
உதிர்ந்த, களத்தில் கடாவிடுதலில்லாத தூற்றாப் பொலியைக் காஞ்சிமரத்தின்
நிழலில் தொகுத்து.
16. "கள்ளா
ருவகைக் கலிமகி ழுழவர்" (அகநா. 346 :
5)
16-8. கள்ளை
யுண்ணுதலையுடைய வலிய கையையுடைய தொழில்
செய்யும் உழவர், நீரினிடத்தே வளர்ந்த ஆம்பற்பூவைத் தலையின் கண்ணே
சூடியவராய், அதனிடத்தே மொய்த்தற்கு வரும் ஆடுகின்ற சிறகையும்
கோடுகளையுமுடைய வண்டுகளை ஓட்டுதற்கு இடமான.
அருவியாம்பல்:
பதிற். 71 : 2.
19. அப்பகைவருடைய
அகன்ற இடத்தையுடைய நாடுகள், பாடல்
மிக்கன ஆகும்.
(பி
- ம்.) 6. மல்கிய. 7. எழுதரு. 11. கொட்டி செப்பி. 12. பகைஞர். (2)
63. |
பார்ப்பார்க்
கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம் |
5 |
மகளிர்க்
கல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை யாயினும்
கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக் |
10 |
குன்றுநிலை
தளர்க்கு முருமிற் சீறி
ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையே மென்றனர் நீயும் |
15 |
நுந்நுகங்
கொண்டினும் வென்றோ யதனாற்
செல்வக் கோவே சேரலர் மருக
காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி |
|