பக்கம் எண் :

182

நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனின்
அடையடுப் பறியா வருவி யாம்பல்
 20 ஆயிர வெள்ள வூழி
வாழி யாத வாழிய பலவே.

     இதுவும் அது. பெயர் - அருவி யாம்பல் (19)

     (ப - ரை) 2. பணியாவுள்ளமென்றது நட்பு நின்ற நிலையின் ஒரு நாளும்
தாழ்வுபடாத உள்ளமென்றவாறு.

     கெழீஇ (2) என்னும் எச்சத்தினை நட்டல் (3) என்னும் தொழிலொடு
முடிக்க.

     அகலம் (4) மகளிர்க்கல்லது மலர்ப்பறியலையே (5) என்றது நின்னொடு
பொருவாரின்மையின் நின் அகலத்தை நின் மகளிர்போகத்துக்கு இடமாக
வல்லது மலர்வித்தலை அறியாயென, "மகளிர் மலைத்த லல்லது மள்ளர்,
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப" (புறநா. 10 : 9 - 10) என்றது போலக்
கொள்க.

     8. சிறியவிலையென்றது கடைக்குறை. 9. தமிழ்செறித்தென்றது மாற்றாரது
தமிழப்படையையெல்லாம் இடையறப் படுத்தியென்றவாறு.

     11. ஒரு முற்று - ஒருவளைப்பு. இருவர்: சோழனும் பாண்டியனும்.

     இருவரையென்னும் உருபு விகாரத்தால் தொக்கது.

     13. ஆடுபெற்று அழிந்த மள்ளரென்றது முன்பு பிறரொடு பொருது
வென்றிபெற்றுப் பின் நினக்கு அழிந்த மள்ளரென்றவாறு.

     மாறியென்றது நின்னொடு பகைமாறி யென்றவாறு.

     14. நீ கண்டனையேமென்றது இன்றுமுதல் நின்னாலே படைக்கப்
பட்டாற் போல்வேமென்றவாறு.

     19. அருவியாம்பலென்றது வீ அரிய எண்ணாம்பலென்றவாறு.

     வீயென்பது குறுகிற்று; அருவி: பண்புத்தொகை.

     'அடையடுப் பறியா வருவி யாம்பல்' எனக் கூறிய இச்சிறப்பானே
இதற்கு, 'அருவி யாம்பல்' என்று பெயராயிற்று.

     பல (21) ஆம்பல் (19) என மாறிக் கூட்டுக.

     நீ (7) பார்ப்பார்க்கல்லது பணிபறியலை (1); நட்டோர்க் கல்லது
கண்ணஞ்சலை (3); நின் அகலம் (4) மகளிர்க்கல்லது மலர்ப்பறியலை
(5); கிளந்த சொற் பொய்ப்பு அறியலை (7); இவை நின்னியல்பு; இவையேயன்றி
வெல்போரோய், முன் பிறர்பால் (12) வெற்றிபெற்று நினக்கு அழிந்த மள்ளர்
நின்னொடு பகைமாறி (13) நீ கண்டனையேமென்று தாழ்வுகூற (14) அதற்கு
ஏற்ப நீயும் நின்பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகங்கொண்டு
இன்னும் வென்றிகூர்ந்தனை; நின் குணங்கள் இவ்வாறாகிய அதனானே (15);
செல்வக்கோவே, சேரலர் மருகனே (16), வாழியாதனே (21) உலகஞ் செய்த
நன்றுண்டெனிற் (18) பல (21) ஆம்பலாகிய (19) ஆயிரவெள்ளவூழி (20)
வாழ்க (21) என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.

     'வாழியாத' (21) என்னும் விளி 'செல்வக்கோவே' (16) என்பது முதலாய்
விளிகளின்பின் நிற்கவேண்டுதலின் மாறாயிற்று.

     இதனாற் சொல்லியது அவன் பல குணங்களையும் ஒருங்கு கூறி
வாழ்த்தியவாறாயிற்று.