பக்கம் எண் :

183

     (கு - ரை) 1. அந்தணருக்குப் பணிதல் அல்லாமல் பிறருக்குப்
பணிதலை அறியாய்; பணிபு - பணிதல்; "மணங்கவல் பின்றி மாழாந்
தெழுந்து " (பொருந. 95), என்புழிக் கவல்பு கவற்சியெனப் பொருள் பட்டாற்
போல்வது இது, "இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த, நான்மறை முனிவ
ரேந்துகை யெதிரே" (புறநா. 6 : 19 - 20)

     2-3. நட்பின் நிலையில் தாழ்வுபடாத மனத்தால் அழகு பொருந்த
மனம் பொருந்தி நின்னொடு நட்புச் செய்தோர்க்கல்லது கண்ணோட்டத்தால் அஞ்சமாட்டாய்.

     4-5. வளைந்த வில் உராய்ந்த நினது மணம் பரக்கின்ற மார்பை, நின்
மகளிர்க்குப் போகத்தின் பொருட்டு மலர்வித்தலை யல்லாமல் பகைவர்க்கு
மலர்வித்தலை அறியாய் (சிறுபாண். 232, . : சீவக. 283,).
சிலைபொருதலாவது அம்பை எய்தற்கு நாணை இழுக்கும்போது அது மார்பிற்
படுதல்; "மாண்வினைச் சாப மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலிகெழு
தடக்கை" (பதிற்.90:32 - 3)

     இளையோர் மகளிரென்றும் பொருளில் வரும் (சிறுபாண்.232,ந.)

     6-7. நிலம் தன் கூறுபாடு எல்லாம் நீங்கும் ஊழிக்காலத்தாயினும் நீ
சொன்ன சொல்லைப் பொய்த்தலை அறியாய்; "நிலம்புடை பெயர்வதாயினுங்
கூறிய, சொற்புடை பெயர்தலோ விலரே" (நற். 289 : 2 - 3); "நிலம்புடை
பெயரினும்" (குறுந். 373 : 1); "நிலம் பெயரினு நின்சொற் பெயரல்", "நிலம்புடை
பெயர்வ தாயினு மொருவன் செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென" (புறநா.
3 : 14, 34 : 5 - 6); "அடியுறை செய்தொழிற் குடிமுதல் பிழைத்தல், இருநிலம்
பெயரினு மெம்மாட் டிலவென" (பெருங். 1. 58 : 91 - 2)

     8. சிறிய இலையையுடைய உழிஞைப் பூவாற் செய்யப்பட்ட மாலையைச்
சூடி. சிறியிலை: தொகுத்தல் விகாரம்.

     9. கொள்ளை மிகுதியாக உண்டாக, தண்ணிய தமிழ்நாட்டிலுள்ள
படைகளை இடையறப்படுத்தி; தமிழ் - தமிழப்படை; "தமிழ்தலை மயங்கிய
தலையாலங் கானத்து" (புறநா. 19 : 2); "விருந்தின் மன்னர் தம்மொடுங் கூடி,
அருந்தமி ழாற்ற லறிந்தில ராங்கென", "தென்றமி ழாற்றல், அறியாது மலைந்த
வாரிய மன்னரை" (சிலப். 26 : 160 - 61, 27 : 5 - 6)

     10. குன்றைத் தன் நிலையினின்றும் தளரச் செய்யும் இடியைப் போலக்
கோபித்து; "மரந்தின்னூஉ வரையுதிர்க்கும், நரையுருமி னேறனையை"
(மதுரைக். 62 - 3)

     11-2. ஒரே வளைப்பினாற் சோழனையும் பாண்டியனையும் வென்ற
ஒள்ளிய வாளினையும், போரில் விருப்பம் மிக்க சேனையையும் உடைய
வெல்லும் போரைச் செய்வோய்.

     13. முன்பு பிறரோடு போர்செய்து வெற்றிபெற்றுப் பின் நினக்குத்
தோற்ற வீரர் தம் பகைமை நீங்கி. 14. நின்னால் மீண்டும் படைக்கப்
பட்டாரைப் போன்றேம் என்று கூறினர்.

     14-5. நீயும் நும் குலத்தாருக்குரிய வன்மையால் இன்னும்பல போர்களை
வென்றோயாதலால்; நுகம் - வன்மை (மலைபடு. 87, .)

     16. செல்வத்தையுடைய அரசே, சேரர்குடியில் வழித்தோன்றலாயுள்ளாய்.
செல்வக்கோ: இவ்வரசன் பெயர்.

     17-8. காற்று அலைகளை உண்டாக்கிய, முழங்குகின்ற ஓசையையுடைய
கடலாகிய எல்லையையும் அகன்ற இடத்தையுமுடைய உலகத்து நன்மக்கள்