பக்கம் எண் :

184

செய்த அறம் உண்டாயின். 19. ஆம்பல்: பரி. 2 : 13, 3 : 44.

     20. வெள்ள ஊழி: மதுரைக். 22 : 3; ஐங்குறு. 281 : 1 - 2.

     21. இவ்வடியில் பாட்டுடைத் தலைவனது பெயர் அமைந்துள்ளது.

     19-21. அடை அடுத்தலை அறியாத, பூக்கள் அரிதாகிய பல ஆம்பல்
என்னும் எண்ணும், ஆயிரத்தாற் பெருக்கிய வெள்ளமென்னும் எண்ணும்
ஆகிய எண்களின் அளவுள்ள பல ஊழிகள் நீ வாழ்வாயாக.

     17-21. பதிற். 90 : 51 - 4; "இவ்வுலகத்துச் சான்றோர் செய்த
நன்றுண்டாயின்..............வாழிய பலவே" (புறநா. 34 : 19 - 22); "ஒன்று
பத்தடுக்கிய கோடிகடை யிரீஇய, பெருமைத் தாகநின் னாயு டானே"
(புறநா. 18 : 5 - 6). மு, இது, வாகைத்துறைப் பாடாண்பாட்டு (தொல்.
புறத். 26, ந.)

     (பி - ம்) 5. மலைப்பு. 9. கொண்டமை. 10. குன்றினிலை. 15. நுந்நுங்
கொண்டினும் வென்றோயே. 19. கடையெடுப்பறியா.      (3)

 

64.



வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால வேள்வி முடித்த கேள்வி
 5




அந்தண ரருங்கல மேற்ப நீர்பட்
டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி
 10




அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென
ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின்
மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக்
 15




காண்கு வந்திசிற் கழறொடி யண்ணல்
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி யதனாற்
பசியுடை யொக்கலை யொரீஇய
 20 இசைமேந் தோன்றனின் பாசறை யானே.


     துறை - 1காட்சிவாழ்த்து. வண்ணமும் தூக்கும் அது. பெயர் -
உரைசால் வேள்வி.
(4)



     1பதிற். 41, துறை.