பக்கம் எண் :

187

மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும
 5 வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ
பூணணிந் தெழிலிய வனைந்துவர லிளமுலை
மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின்
வேய்ப்புரை பெழிலிய விளங்கிறைப் பணைத்தோட்
காமர் கடவுளு மாளுங் கற்பிற்
 10 சேணாறு நறுநுதற் சேயிழை கணவ
பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை
பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பநின்
நாண்மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
 15 பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச்
சேறுசெய் மாரியி னளிக்குநின்
சாறுபடு திருவி னனைமகி ழானே.

     துறை - பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - நாண்மகி ழிருக்கை (13)

     (ப - ரை) விரியுளை சூட்டி (2) என்றதனாற் பயன் மாவிற்குப்போர்
வேட்கை பிறத்தல்.

     சூட்டிக் (2) கடந்த (3) என முடிக்க.

     4. காஞ்சி சான்ற வயவரென்றது நிலையாமை எப்பொழுதும் உள்ளத்திற்
கொண்டிருத்தலமைந்த வீரரென்றவாறு.

     6. வனைந்து வரலென்பது ஒரு வாய்பாட்டு விகற்பம்.

     13. அவன் ஓலக்க இருக்கையின் செல்வத்தை நாண்மகிழிருக்கை யெனக்
கூறிய சொற்சிறப்பானே இதற்கு 'நாண்மகி ழிருக்கை' என்று பெயராயிற்று.

     14. தீந்தொடை - 1பாலைக் கோவைகளாகிய வீக்குநிலை.

     பையுளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்கு (15) அளிக்கும் (6) நனை (17)
எனக் கூட்டி எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினையுடைய
பாலைப்பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்து
வாசிக்குமாறுபோலே ஒன்றையொன்று ஒவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக்
கொடுக்கும் பலதிறத்து மதுவென வுரைக்க.

     17. நனையென்றது ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப் பெயராய் நின்றது.

     16. மாரியினென்னும் உவமம் மதுக்களில் ஓரோவொன்றைக் மிகுதிக்கு
உவமம்.

     17. சாறுபடு திருவினென்ற உவமம் அம்மதுக்களைப் பானம்பண்


     1பாலைக் கோவைகளென்றது செம்பாலை முதலிய எழுவகைப்பாலைப்
பண்களை.