|
ணுங்காலத்து அலங்காரமாகக்
கூட்டும் 1பூவும் விரையுமுதலாய
பொருள்களுக்கு உவமம். சாறென்றது விழாவின் தன்மையை. மகிழென்றது
மகிழ்ச்சியையுடைய ஓலக்கவிருப்பினை.
வயவர் பெரும
(14) வில்லோர் மெய்ம்மறை, சேர்ந்தோர் செல்வ (5),
சேயிழை கணவ (10), பாணர் புரவல, பரிசிலர் வெறுக்கை (11), புகழ்
சான்மார்ப, நின் (12) நாண்மகிழிருக்கையின் சிறப்பெல்லாம் (13) நின்
நனைமகிழின்கண்ணே (17) இனிது கண்டேம் (12) எனக் கூட்டி வினைமுடிவு
செய்க.
இதனாற் சொல்லியது
அவன் ஓலக்க வினோதத்தொடு படுத்து அவன்
செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1 - 4. சேரன் பகைவரை வென்றமை கூறப்படும்.
1-2. வெட்டப்பட்ட
பிணங்களை இடறுதலால் உண்டான இரத்தத்தாற்
சிவந்த கறையையுடைய குளம்பினையும், விரைந்த செலவையும் உடைய நல்ல
குதிரைக்கு விரிந்த தலையாட்டத்தைச் சூட்டி.
உளையைச் சூட்டியது
குதிரைக்குப் போரில் வேட்கை பிறத்தற்
பொருட்டு. மறுக்குளம்பு: புறநா. 97
: 11 - 3, 98 : 5 - 7.
4. மு.
பதிற். 90 : 39.
3-4. நின்னோடு
மாறுபட்ட பகைவரது வீரம் கெடும்படி வஞ்சியாது
எதிர்நின்று வென்ற, நிலையாமை எப்போதும் தம் நெஞ்சில் நிலைபெற்ற
வீரருக்குத் தலைவ.
5. விற்படையாளருக்குக்
கவசம்போல்வாய், நின்னை அடைந்தோருடைய
செல்வமாக இருப்பாய். இல்லோரெனப் பிரித்துப் பொருளில்லாதவரெனக்
கொள்ளலுமாம்.
6-10.
சேரன் பெருந்தேவியின் சிறப்பு.
முத்தாரம் முதலியவற்றை
அணிந்து அழகுப்பெற்ற, எழுதப்பட்டாற்
போன்று வருதலையுடைய இளைய நகிலையும், மாட்சிமைப்பட்ட
வரிகளையுடைய அல்குலையும், மலர்ந்த கண்களையும், மூங்கிலை ஒத்து
அழகுபெற்ற விளங்கிய மூட்டுக்களையுடைய பெருத்த தோள்களையும்,
விரும்பத்தக்க அருந்ததியையும் வென்ற கற்பினையும், நெடுந்தூரத்தே மணம்
கமழ்கின்ற நல்ல நெற்றியையும் உடைய சிவந்த ஆபரணங்களை
அணிந்தோளுக்குக் கணவ. சேயிழை கணவ என்றது அவள் கற்பின் சிறப்பு
நோக்கி; 'ஐயைதந்தை: ஐயை: ஒரு கற்புடைய மகள்; இவள் தந்தையென்றது
இவள் கற்புடைமை நோக்கி' (அகநா.
6 : 3, உரை)
சேயிழை கணவ:
பதிற். 14 : 15, உரை.
11. பாணரது குடும்பத்தைப்
புரந்தலைவல்லாய்; "யாணர்க் கோளூரென்ப,
பாணர்ப் பாரந் தாங்கியோன் பதியோ"(யா-வி.16,மேற்);
பரிசிலரது
செல்வமாயிருப்பாய் (பதிற். 15
: 21. 38 : 9)
12. அணிந்தென்னும்
முதல்வினை சினைவினை கொண்டது (தொல்.
வினை. 34, ந.)
12-3. ஏழு முடியாற்
செய்த ஆரம் முதலிய ஆபரணங்களை அணிந்து
விளக்கமுற்ற புகழ்மிக்க மார்பையுடையாய், நின்னுடைய நாளோலக்கத்தின்
செல்வச் சிறப்பை இனிமையாகக் கண்டோம்.
1பதிற்.
42. 10-11, உரை.
|