|
14-7.
இனிய நரம்புக்கட்டையுடைய பாலையாழை வாசித்தலில்
வல்லோன் பண்கள் எல்லாவற்றுள்ளும் துன்பத்தைச் செய்யும் உறுப்பையுடைய
பாலைப் பண்களை மாறிமாறி வாசித்தாற்போல, சேற்றைச் செய்கின்ற
மழையைப் போல அளிக்கும் விழாவின் தன்மை யுண்டான செல்வத்தைப்
போன்ற மதுவால் மகிழ்ச்சியையுடைய ஓலக்க விருப்பின் கண்ணே.
பாலைப்பண் வெவ்வேறான
சுவையையுடைய மதுவிற்கு உவமை;
"நல்லியாழ்ப், பண்ணுப் பெயர்த்தன்ன காவும், பள்ளியும்" (மலைபடு.
450 - 51)
என்பதும், 'பண் ஒன்றையொன்று ஒவ்வாது இனிதாயிருக்குமாறுபோல நுகரும்
பொருள்களும் ஒன்றையொன்று ஒவ்வா இனிமையுடைய என்றார்" (ந.)
என்னும்
அதனுரையும் இங்கே அறிதற்பாலன.
மகிழுக்கு மாரி;
"பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், வாக்கவுக்க
தேக்கட் டேறல், கல்லலைத் தொழுகு மன்னே" (புறநா.
115 : 2 - 4) (5)
66.
|
வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லு முதுவா யிரவல
இடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார் |
5
|
வேலுடைக்
குழூஉச்சமந் ததைய நூறிக்
கொன்றுபுறம் பெற்ற பிணம்பயி லழுவத்துத்
தொன்றுதிறை தந்த களிற்றோடு நெல்லின்
அம்பண வளவை விரிந்துறை போகிய
ஆர்பத நல்கு மென்ப கறுத்தோர் |
10
|
உறுமுரண்
டாங்கிய தாரருந் தகைப்பின்
நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற்
றோன்மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த |
15
|
கடவுள்
வாகைத் துய்வீ யேய்ப்பப்
பூத்த முல்லைப் புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின்
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் |
| 20 |
அகன்கண்
வைப்பி னாடுகிழ வோனே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - புதல்சூழ் பறவை (16)
(ப
- ரை) 3.
படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று; படர்தல்
- நினைவு. 4. ஒன்றுமொழிதல் - வஞ்சினங் கூறல்.
|