20
|
பலர்புகழ்
செல்வ மினிதுகண் டிகுமே
கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி
பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவும்
ஆரியர் துவன்றிய பேரிசை யிமயம்
தென்னங் குமரியொ டாயிடை |
25
|
மன்மீக்
கூறுநர் மறந்தபக் கடந்தே. |
துறை-
1செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - 2ஒழுகு வண்ணம்.
தூக்கு - 3செந்தூக்கு, பெயர் - புண்ணுமிழ் குருதி (8)
(பழைய
வுரை)
1.
பிசிருடையவென்றது பிசிராக உடையவென்றவாறு.
2. கமஞ்சூல் - நிறைந்த நீர்; சூல்போறலாற் சூலெனப்பட்டது.
5, சூருடை முழுமுதலென்றது சூரவன்மாத் தனக்கு அரணாகவுடைய
மாவின் முதலென்றவாறு.
இனிச் சூரவன்மாத்தான் ஓர்மாவாய் நின்றானென்று 4 புராணம்
உண்டாயின், சூரனாதற் றன்மையையுடைய மாவின் முதலென்றவாறாம்.
9-10. நீர்நிறம் பெயர்ந்து, மனாலக் கலவைபோலவென முடிக்க.
போலவென்றது ஈண்டுப் போலும்படியென வினையெச்சப் பொருள்
பட்டு நின்றது. மனாலமென்றது குங்குமம்; சாதிங்குலிகமென்பாரும் உளர்.
8-10. 'அருநிறந்திறந்த' என முன்வந்த அடைச்சிறப்பானும், 'மணிநிற
விருங்கழி நீர்நிறம் பெயர்ந்து, மனாலக் கலவை போல' எனப் பின்வந்த
அடைச்சிறப்பானும் இதற்கு, 'புண்ணுமிழ் குருதி'
என்று பெயராயிற்று.
19-20. மேல்கொண்டு பொலிந்த நின் செல்வமென முடிக்க.
1செந்துறை:
'செந்துறையாவது விகார வகையான் அமரராக்கிச் செய்யும்
அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற
மக்களைப் பாடுதல். இது செந்துறைப் பாடாண் பாட்டு எனப்படும்'
(தொல்.
புறத். .27, ந.) பாடாண்:
'பாடாணென்பது பாடுதல் வினையையும் பாடப்படும்
ஆண்மகனையும் நோக்காது அவனது ஒழுகலாறாகிய திணையை
உணர்த்தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை'
(தொல். புறத். .25, ந.)
2ஒழுகுவண்ணம்:
அற்று அற்றுச் செல்லாமல் ஒழுகிய ஓசையாற்
செல்வது (தொல்.
செய். 226, பேர்.)
3செந்தூக்கு
- ஆசிரியப்பா (தொல்.
செய்.
71.
பேர்.)
தூக்கு -
பாக்களைத் துணித்து இத்துணை யடியெனக் கூறுபாடறிதல் (தொல்.
செய்.
1, 87,
பேர்.)
4புராணமென்றது
காந்தம் முதலியவற்றை. உண்டாயின் -
உண்டாதலால்; ஆயின்: ஆதலால் என்னும் பொருளில் வந்தது (புறநா.
34
:
20, உரை)
|