|
ஒன்றுமொழிந்து
(4) கொன்றுபுறம்பெற்ற (6) எனக் கூட்டி, ஒன்று
மொழிதலும் கொன்று புறம்பெறுதலும் ஒன்னாரதன்றி இவன்
தொழிலாகவுரைக்க.
ஒன்னாரது (4)
குழு (5) எனக் கூட்டி, கொன்றதும் புறம்பெற்றதும்
அக்குழுவையேயாக வுரைக்க.
7. திறை தந்தவென்றதற்கு
அவன் ஒன்னார் திறையாகத் தந்தவென
வருவித்து உரைக்க. 8. அம்பணம் - மரக்கால். உறைபோதல் - 1உறையிட
முடியாதொழிதல். அளவை விரியவெனத் திரிக்க.
நெல்லின் (7)
ஆர்பதம் (9) என இருபெயரொட்டு.
10. தாரருந்
தகைப்பு - ஒழுங்குடைய மாற்றாராற் குலைத்தற்கரிய படை
வகுப்பு.
11. நாண்மழை
- பருவமழை. 12. தோலொடுவென ஒடு விரிக்க.
13. தார் புரிந்தன்ன
வாள் - பூமாலைகள் அசைந்தாற்போல
நுடங்குகின்ற வாள்.
தகைப்பினையும்
(10) எஃகினையுமுடைய (12) போர் (14) எனக் கூட்டுக.
15. கடவுள் வாகை-வெற்றிமடந்தையாகிய
கடவுள் வாழும் வாகை.
14-6. கிழித்துக்
குறுக நறுக்கி வாகையோடு இடைவைத்துத் தொடுத்த
பனங்குறுத்து முல்லைமுகைக்கு ஒப்பாகவும் வாகைவீ அம் முல்லையைச்
சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமங்கொள்ளவைத்த சிறப்பானே இதற்கு,
'புதல்சூழ் பறவை' என்று பெயராயிற்று.
19. திருமணி
பெறுவார் அந்நாட்டாராகக் கொள்க.
அவனை நினைத்துச்செல்லு
முதுவாயிரவலனே (3), நின் நினைவிற்
கேற்ப நாடுகிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று கொடுப்பதின்றி
(20) ஒன்னார் (4) பிணம்பயிலழுவத்துத் (6) திறையாகத் தந்த களிற்றோடு
தன்னாட்டு விளைந்த நெல்லாகிய (7) உணவினைக் கொடா நின்றானென்று
எல்லாரும் சொல்லுவார்கள் (9); ஆதலால், அவன் பால் ஏகு எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் வென்றிச்சிறப்புடன் படுத்துக் கொடைச்
சிறப்புக் கூறியவாறாயிற்று.
'படர்ந்தனை
செல்லும்' என்று பாணன் தன்னில் நினைவன
கூறினமையால், துறை பாணாற்றுப்படையன்றிச் செந்துறைப்பாடாணாயிற்று.
(கு
- ரை) 1-2. வளைந்த கரிய தண்டினையுடைய, இனிய
நரம்புக் கட்டு
இசையில் முதிர்ந்த, இடமுடைய பேரியாழென்னும் யாழைப்பாலைப் பண்ணாக அமைத்து.
3. சேரனை நினைந்து
செல்லுகின்ற பேரறிவு வாய்ந்த இரவலனே.
படர்ந்தனை: முற்றெச்சம். முதுவாயிரவல: முருகு. 284; புறநா. 48 : 7.
4-5. இடியினைப்
போன்ற முரசத்தோடு வஞ்சினத்தைக் கூறி, பகைவரது
வேலைப்பெற்ற திரளுதலையுடைய போர் கெடும்படி அழித்து.
6. கொன்று அவர்
முதுகுகாட்டி ஓடுதலைப்பெற்ற, பிணங்கள் நெருங்கிய
போர்க்களப்பரப்பில். 7. பழைய திறையாகத் தந்த ஆண்
1உறையிடுதல்
- தானியங்களை அளக்குங்கால் அத்தானியங்களைக்
கொண்டே அளவு குறித்தல்.
|