பக்கம் எண் :

191

யானைகளோடு நெல்லாகிய களிற்றைத் திறையாகத் தருதல்: பதிற்.
90 : 6 - 7. ஒன்றுமொழிந்து (4) கொன்று புறம்பெற்ற (6) என இயைக்க.

     8. அம்பணம்: பதிற். 71 : 5: ஐங்குறு. 43 : 1; சிலப். 14 : 209.

     8-9. மரக்காலின் அளவையால் அளந்து உறையிடமுடியாத உணவை
அளிப்பானென்று சொல்லுவார்.

     7-9. நெல்லின் ஆர்பதமென இயைக்க.

     9-10. கோபங்கொண்ட பகைவரது மிக்க மாறுபாட்டைத் தடுத்த,
ஒழுங்கையுடைய பகைவரால் குலைத்தற்கு முடியாத படைவகுப்பையும்.

     11-12. விடியற்காலத்தே மேகத்தின் கூட்டத்தையுடைய சிகரத்தை ஒத்த
தோற்றத்தையுடைய பரிசைப்படையின் மேலதாகி எழுகின்ற ஒளி பரவி
விளங்குகின்ற வேலையும்; பரிசைக்கு மேகம் உவமை (பதிற். 52 : 5, உரை).
எஃகு தோலின்மேற் றோன்றுதல்: பதிற். 50 : 9.

     13. பூமாலைகள் அசைந்தாற்போலச் சுழலுதலையுடைய வாள்
விழாவையும் உடைய. வாளுக்குப் பூமாலை உவமை; "தூவலி னனைந்த
தொடலை யொள்வாள்" (ஐங்குறு. 206 : 3)

     தகைப்பினையும் (10) எஃகினையும் (12) விழவினையும் (13) உடைய
மள்ளர் (14) என இயைக்க.

     14-5. போர் உண்டாகின்ற வீரர், பனங்குருத்தோடு சேர்த்துத் தொடுத்த,
துர்க்கை வாழ்தலையுடைய வாகைமரத்தினது துய்களை யுடைய பூவைப்போல.
14 - 6. பனந்தோட்டோடு பூவைத் தொடுத்தல்: பதிற். 67 : 13; புறநா.
100 : 3 - 5, 265 : 2 - 3.

     16-7. பூத்த முல்லைக் கொடியினது புதலைச் சூழ்ந்த வண்டாகிய
பறவை, காட்டினிடத்தே பிடாமரத்தின் தொடுத்தலையுடைய பூக்குலையிலே
தங்குதற்கு இடமான. முல்லைப்பூவிற்கு வெள்ளிய பனங்குருத்தின்
துண்டுகளும், வாகைப் பூவிற்கு வண்டும் உவமை.

     18-20. உயர்ந்த பளிங்கு கலந்த சிவந்த பருக்கைக் கற்களையுடைய
மேட்டு நிலத்தில், விளங்குகின்ற கிரணங்களையுடைய அழகிய மணியை
அவ்விடத்தே வாழ்வார் பெறும் அகன்ற இடத்தையுடைய ஊர்களையுடைய
நாட்டுக்குரியோன்.

     காட்டில் மணி பெறுதல்: பதிற். 21 : 22, 58 : 18 - 9, உரை.

     நாடுகிழவோன் (20) களிற்றோடு நெல்லின் (7) ஆர்பதம் நல்கும் என்ப
(9) என முடிக்க.

     (பி - ம்) 2. யாழ்ப்பாலை. 3. கடறுழந்து செல்லும்.      (6)

 

67. கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபிற் கைவல் பாண
தெண்கடன் முத்தமொடு நன்கலம் பெறுகுவை
 5 கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க
வயங்குகதிர் வயிரொடு வலம்புரி யார்ப்பப்
பல்களிற் றினநிரை புலம்பெயர்ந் தியல்வர