|
அமர்க்க
ணமைந்த வவிர் நிணப் பரப்பிற்
குழூஉச்சிறை யெருவை குருதி யாரத் |
10 |
தலைதுமிந்
தெஞ்சிய வாண்மலி யூபமொ
டுருவில் பேய்மகள் கவலை கவற்ற
நாடுட னடுங்கப் பல்செருக் கொன்று
நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்
வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர் |
15 |
நெறிபடு
மருப்பி னிருங்கண் மூரியோடு
வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்
எஃகா டூனங் கடுப்பமெய் சிதைந்து
சாந்தெழின் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தண் மாறா தூதிய |
20 |
கடும்பறைத்
தும்பி சூர்நசைத் தாஅய்ப்
பறைபண் ணழியும் பாடுகா னெடுவரைக்
கல்லுயர் நேரிப் பொருநன்
செல்வக் கோமாற் பாடினை செலினே. |
துறை
- பாணாற்றுப்படை. வண்ணமும் தூக்கும் அது. பெயர் - வெண்போழ்க் கண்ணி (13)
(ப
- ரை) 1.
கொடுமணமென்றது ஓரூர்.
2.
பந்தர்ப் பெயரிய - பந்தரென்னும் பெயரைப் பெற்ற.
5.
1சொட்டையாளர் படைதெரியவென ஒருசொல் வருவிக்க. வெல்கொடி
நுடங்கவென்றது மாற்றாரெதிரே அவர் கண்டு நடுங்கும்படி பண்டுவென்ற
கொடி நுடங்கவென்றவாறு.
7.
களிறு இனநிரை புலம்பெயர்ந்து இயல்வரவென்றது களிற்றின் நிரை
களத்திலே போர்வேட்டுப் புடைபெயர்ந்து திரிய வென்றவாறு.
கொல்படை
தெரிய (5) என்பது முதல் இயல்வர (7) என்பது ஈறாக
நின்ற வினையெச்சம் நான்கினையும் நிகழ்காலப் பொருட்டாகிச்
செருக்கொன்று (12) என்னும் வினையோடு முடிக்க.
குருதியாரப்
(9) பேய்மகள் கவலை கவற்ற (11) நாடுடன் நடுங்க (12)
என நின்ற வினையெச்சங்கள் மூன்றினையும் ஆரும்படி கவலை கவற்றும்படி
நாடுடன் நடுங்கும்படியான எதிர்காலப் பொருட்டாக்கிக் கொன்று (12) என்னும்
வினையொடு முடிக்க.
8.
அமர்க்கண் அமைந்த பரப்பென்றது அமர்செய்யும் இடத்திற்கு இடம்
போந்த பரப்பென்றவாறு.
10.
ஆண்மலி யூபமென்றது ஆண்மை மிக்க யூப மென்றவாறு.
1சொட்டை
- ஒருவகையாயுதம்; “சொட்டை வாள்பரிசை”, “உகிரெனும்
பெரும்பெயர் பெற்ற சொட்டைகள்” (வி, பா,
கண்ணன் றூது. 101, 17-ஆம்
போர். 156)
|