11.
கவலை கவற்றவென்றது கண்டார்க்கு வருத்தத்தைச் செய்யும்படி
யென்றவாறு.
12.
கொன்றென்னும் வினையெச்சத்தினை மெய் சிதைந்து (17) என்னும்
வினையொடு மாறிக் கூட்டுக.
13.
தொடுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தினைத் தொடுக்கப்படும்
கொன்றையொடு தொடுத்தது பற்றி. 'நாறிணர்க் கொன்றை வெண்போழ்க்
கண்ணி' எனக்கூறிய அடைச்சிறப்பானே இதற்கு. 'வெண்போழ்க்
கண்ணி'
என்று பெயராயிற்று.
14.
மெய்சிதைந்து (17) என்று உடலுருவப்பட்டமை கீழே
சொன்னமையால். வாள் முகம் பொறித்த மாண்வரியாக்கையரென்பதற்கு
வாள் முகத்திலே பொறித்த மாண்வரியையுடைய யாக்கையரென 1முகத்தில்
வடுவாக்கியுரைக்க. 15. இருங்கண் மூரியென்றது பெரிய உடலிடத்தையுடைய
எருதென்றவாறு.
கண்ணியர்
(13) மாண்வரி யாக்கையராகிய (14) சான்றோர் பெருமகன்
(18) என மாறிக் கூட்டுக.
17-8. மெய்
சிதைந்து சாந்து எழில் மறைத்த என்றது மெய்யானது
சிதைந்து அச்சிதைந்த வடுக்களானே பூசின சாந்தின் அழகை மறைத்த
என்றவாறு. 19. மாறாது ஊதியவென்றது இது சூரியனுடையதென்று அறிந்தும்
நீங்காது ஊதியவென்றவாறு.
20.
சூர்நசைத்தாயென்றதனைச் சூர்நசைத்தாகவெனத் திரித்துக் காந்தள்
சூரானது நச்சுத்தலையுடைத்தாகலானேயென வுரைக்க.
கைவல்
பாண (3). நெடுமொழியொக்கலொடு நீ (1) சான்றோர்
பெருமகன் (18). நேரிப்பொருநனாகிய (22) செல்வக்கோமானைப் பாடிச்
செல்லின் (23). பந்தர்ப்பெரிய மூதூர்த் (2) தெண்கடன்முத்தமொடு (4)
கொடுமணம்பட்ட (1) நன்கலம் பெறுகுவை (4) என மாறிக் கூட்டி வினை
முடிவு செல்க.
இதனாற்
சொல்லியது அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-4. சேரன் அளிக்கும் பரிசிற்பொருள்கள்.
யாழை
வாசித்தலின் முறையை யறிந்த கைவல்ல பாணனே. கொடுமணம்
என்னும் ஊரிலேயுண்டான நல்ல ஆபரணங்களை. பந்தரென்னும்
பெயரையுடைய பெரிய புகழையுடைய பழைய ஊரினிடத்தே உள்ள தெளிந்த
கடலில் விளைந்த முத்துக்களோடு பெறுவாய். பெயரிய; பெயரென்னும்
பெயர்ப் பகுதியடியாகப் பிறந்த பெயரெச்சம். கொடுமணக்கலனும்.
பந்தர்முத்தும்: பதிற். 74 : 5 - 6.
5.
படைத்தலைவர் படைகளை ஆராய. முன்பு வென்றமையால் எடுத்த
கொடிகள் விளங்க.
6.
விளங்குகின்ற கிரணங்களையுடைய கொம்பென்னும் வாத்தியத்தோடு
வலம்புரிச்சங்கு ஒலிக்க வயிரும் சங்கும்: முருகு.
120. குறிப்புரை.
7.
பல களிறாகிய கூட்டத்தின் வரிசை போரை விரும்பித் தம்
இருப்பிடத்தை விட்டுத் திரிய. 8 - 9. போர் செய்யும் இடத்திற்குப் பொருந்திய
விளங்குகின்ற நிணத்தையுடைய களப்பரப்பில் கூட்டமாகிய சிறகுகளையுடைய
பருந்து இரத்தத்தை நிரம்ப உண்ண.
1விழுப்புண்ணைக்
கூறியபடி.
|