10-11.
தலை வெட்டப்பட உடல்மட்டும் மிஞ்சிய ஆண்மை மிக்க
கவந்தத்தோடு. அழகிய வடிவில்லாத பேய்மகள் கண்டார்க்கு வருத்தத்தைச்
செய்யும்படி. துமிந்து - துமிய.
12. நாடு முழுவதும்
நடுங்கப் பல போர்களிலே கொன்று.
நுடங்க (5) ஆர்ப்ப
(6) இயல்வர (7) ஆரக் (9) கவலை கவற்றக் (11)
கொன்று (12) என இயையும்.
13-4. மணம்
கமழ்கின்ற பூங்கொத்துக்களையுடைய கொன்றையினது
பூவைப் பனங்குருத்தின்கண் வைத்துத் தொடுத்த கண்ணியை யுடையவராகிய.
வாளின்வாய் உண்டாக்கிய மாட்சிமைப்பட்ட தழும்பைப் பெற்ற
உடம்பினையுடைய வீரர்.
கண்ணியர் (13)
ஆகிய யாக்கையர் (14) என்க.
15-7. நெறித்தல்
பொருந்திய கொம்பினையும் பெரிய கண்ணையும்
உடைய எருத்தோடு வளைந்த தலையையுடைய மற்ற விலங்குகளையுடைய
தாழ்ந்த இழிவான இறைச்சியை விற்பாருடைய வெட்டும் அரிவாளால் ஊனைக்
கொத்துதலையுடைய மரக்கட்டையை ஒப்ப உடம்பு சிதைந்து; "ஊனமர்
குறடுபோல விரும்புண்டு மிகுத்த மார்பின்" (சீவக.
2281).
பாசவரும் ஊனமும்:
பதிற். 21 : 9 - 10. மெய்சிதைதல்:
"செங்களந்
துழவுவோள் சிதைந்துவே றாகிய. படுமகன்" (புறநா.278:7-8)
18. பூசிய சந்தனத்தின்
அழகை மறைத்த வீரருடைய தலைவன்;
"பாடுபுலர்ந்த நறுஞ்சாந்தின். விழுமிய பெரியோர் சுற்றமாக" (மதுரைக்.
226 - 7)
19-20. மலர்ந்த
காந்தளினது மலரை இது தெய்வத்திற்கு உரியதென்று
அறிந்தும் அதன்பால் நின்றும் நீங்காமல் ஊதிய. விரைந்த பறத்தலையுடைய
தும்பியென்னும் சாதிவண்டு. அக்காந்தள் தெய்வம் விரும்புதலையுடைய
தாகலால். தெய்வம் விரும்பும் காந்தளில் வண்டு ஊதாமை: "சுரும்பு மூசாச்
சுடர்ப்பூங் காந்தள்" (முருகு. 43). நசைத்தாய்
- நகைத்தாக; எச்சத்திரிபு.
21 - 2. பறத்தல் சீர்கெடுதற்கு இடமான புகழ்ச்சிமிக்க நீண்ட மலையாகிய.
பக்கமலைகள் உயர்ந்த நேரிக்கு உரிய ஒப்பற்றோனாகிய.
23. செல்வத்தையுடைய
கோமானை நெடுமொழியையுடைய சுற்றத்தோடு
(1) பாடினையாய்ச் சென்றால்.
பாண (3) ஒக்கலொடு
(1) பெருமகன் (18) பொருநன் (22) கோமாற்
பாடினை செலின் (23) முத்தமொடு நன்கலம் பெறுகுவை (4) என முடிக்க.
(பி
- ம்) 5. தொல்படை. 12. பலசெருக்கடந்து.
16. தாழிரும் பாசகர். 17.
எஃகாடூணம். (7)
68. |
கால்கடிப்
பாகக் கடலொலித் தாங்கு
வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பட்
கடுஞ்சிலை கடவுந் தழங்குகுரன் முரசம்
அகலிரு விசும்பி னாகத் ததிர |
5 |
வெவ்வரி
நிலைஇய வெயிலெறிந் தல்ல
துண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய |
|