பக்கம் எண் :

195

நெஞ்சுபுக லூக்கத்தர் மெய்தயங் குயக்கத்
தின்னா ருறையுட் டாம்பெறி னல்லது
வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு
 5 கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன்
அருங்க ணொடைமை தீர்ந்தபின் மகிழ்சிறந்து
நாம மறியா வேம வாழ்க்கை
வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந் தல்கலும்
இன்னகை மேய பல்லுறை பெறுபகொல்
 15 பாய லின்மையிற் பாசிழை ஞெகிழ
நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்
செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல்
அணங்கெழி லரிவையர்ப் பிணிக்கும்
 20 மணங்கமழ் மார்பநின் றாணிழ லோரே.

     துறை : செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணமும் தூக்கும் அது.
பெயர் - ஏம வாழ்க்கை
(12)

     (ப - ரை) கால் கடிப்பாகக் கடல் ஒலித்தாங்கு (1) முரசும் (3) அதிர
(4) எனக் கூட்டுக.

     எயிலெறிந்து (5) என்ற எச்சத்திற்கு உண்ணாது (6) என்றது இடமாக
உண்டலென ஒரு தொழிற்பெயர் வருவித்து முடிக்க.

     உண்ணாது (6) என்றதனை உண்ணாமலெனத் திரித்து அதனை
அடுக்கிய வென்னும் வினையொடு முடித்துக் கழியவென்றதனைக் கழியா
நிற்கவென்னும் பொருளதாக்கி அதனைப் பெறின் (8) என்னும் வினையொடு
முடிக்க.

     7. ஊக்கத்தரென்றது வினையெச்சம் 11. கள் நொடைமை - கள்விலை.
12. நாமம் அறியா ஏம வாழ்க்கையென்றது துன்பம் இடை விரவின இன்பமன்றி
இடையறாத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை யென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு 'ஏம வாழ்க்கை' என்று பெயராயிற்று.

     13. வடபுலம் - போகபூமியாகிய 1உத்தரகுரு.

     14. இன்னகை - இனிய இன்பம். பல்லுறை - பலநாள் உறைதல்.

     இன்னகை (14) அல்கலும் (13) மேய (14) எனக் கூட்டுக.

     பாசிழை ஞெகிழ (15) நாள்பல எழுதி (17) என முடிக்க.

     அரிவையர்ப் பிணிக்கும் (19) மணங்கமழ் மார்ப. நின் தாள் நிழலோர்
(20) உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய (6) இன்னார் உறையுள்தாம்
பெறினன்றி (8) இன்னகை (14) அல்கலும் (13) மேய பல்லுறை பெறுபகொல்?
பெறார் (14); அவர் அவ்வாறு அது பெறினன்றி நின் மார்பாற் பிணிக்கப்பட்ட


     1உத்தரகுரு: சிலப். 2: 10.