அரிவையரும் இன்னகை
அல்கலும் மேய பல்லுறை பெறுவது ஏதெனக் கூட்டி
வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
1காம வேட்கையின் ஓடாத அவன் வென்றி
வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1. காற்றே அடிக்கும் குறுந்தடியாக அமையக் கடல்
ஒலித்தாற்போல.
2. வேற்று நாட்டினிடத்தே
சென்று தங்கிய பாசறையின் நடுவே.
3-4. மிக்க
ஓசையைப் பாசறை முழுதும் செலுத்துகின்ற ஒலிக்கின்ற
ஓசையையுடைய வெற்றி முரசும். மற்ற நான்கு பூதங்கள் விரிதற்குக்
காரணமான பெரிய ஆகாயத்தினிடத்தே அதிரும்படி முழங்க.
1-4. முரசின்
ஒலிக்குக் கடலொலி உவமை: பதிற். 69 :
3 - 4; "புணரி.
குணில்வாய் முரசி னிரங்குந் துறைவன்" (குறுந்:
328 : 2 - 3)
5-6. விரும்பத்தக்க
சித்திரங்கள் நிலைபெற்ற மதிலை அழித்தல்லது
உண்ணுதலைச் செய்யாமற் பலவாக அடுக்கிய பொழுதுகள் பல நீங்கா நிற்ப.
7-8. நெஞ்சு
விரும்பிய ஊக்கத்தையுடையராய். உடம்பு
அமையும்படிவந்த ஓய்வினையுடைய பகைவரது உறைவிடத்தைத் தாம்
பெற்றாலல்லாமல். மெய்தயங்குமயக்கம்: பதிற்.
79 : 15.
9-10. பகைவேந்தர்
ஏறிச் செல்லும் யானையினது வெண்கோட்டைக்
கொண்டு கள்ளினது கொடி அசையும் கடைத்தெருவிலே சேரப்புக்கு.
கட்கொடி . .
. . . ஆவணம்:``கள்ளின் களிநவில் கொடியொடு``
(மதுரைக். 372); ``நெடுங்கொடி நுடங்கு நறவுமலி
மறுகில்``
(அகநா. 126 : 10)
11. பெறுதற்கு
அரிய கள்ளிற்கு விலையாகக் கொடுத்து உண்ட பிறகு
மகிழ்ச்சி மிக்கு. 9 - 11. யானைக்கோட்டைக் கள்ளுக்கு விலையாகத் தருதல் :
பதிற். 30 : 11 - 2. உரை.
12-3. துன்பத்தால்
வரும் அச்சத்தை அறியாத இன்பமேயான
வாழ்வையுடைய வடக்கேயுள்ள நிலமாகிய உத்தரகுருவில் வாழ்வாரைப்
போலப் பெரிதும் விரும்பி நாள்தோறும்.
14. இனிய இன்பம்
பொருந்திய பல நாள் உறைதலைப் பெறுவார்களோ?
15. உறக்க மில்லாமையால்
பசிய பொன்னாற் செய்த இழை நழுவ;
பாயல் - தூக்கம் (பதிற். 19 :
12 உரை); ‘`படலின் பாயல் வௌவியோளே``
(ஐங்குறு. 195)
16-7. உயர்ந்த.
மண்ணாற் செய்யப்பட்ட மதிலையுடைய நீண்ட
அரண்மனையின் எல்லையில். சித்திரத்தை ஓத்த அழகையுடைய உயர்ந்த
சுவரில் தலைவன் பிரிந்து சென்ற நாட்களைக் கோடிட்டு எழுதி; சுவரில்
எழுதுதல்: குறுந். 358 ; 3. ஒப்பு. ஓவு: ஓவமென்பதன்
கடைக்குறை.
18-9. இயல்பாகச்
சிவந்த விரல் பின்னும் சிவந்த. அழகிய
வரிகளையுடைய சிலம்பையணிந்த. நோக்கினாரை வருத்துகின்ற
அழகையுடைய மகளிரை வசப்படுத்துகின்ற.
20. நல்ல மணம்
கமழ்கின்ற மார்ப. நினது தாளினது நிழலில்
வாழ்வோர்.
1பதிற்.
50, உரை.
|