பக்கம் எண் :

197

     தாணிழலோர் (20) ஊக்கத்தராய் (7) இன்னார் உறையுள் பெறினல்லது
(8) பல்லுறைபெறுபகொல் (15) என முடிவு செய்க.

     (பி - ம்) 18. குடச்சூல்.                     (8)

69.



மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியில் வயின்வயி னுடங்கக்
கடல்போற் றானைக் கடுங்குரன் முரசம்
காலுறு கடலிற் கடிய வுரற
 5




எறிந்துசிதைந்த வாள்
இலைதெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
 10




கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல். அசைவில் கொள்கைய ராகலி னசையா
தாண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
 15


விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.

     துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகு
வண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்
தூக்கும். பெயர் - மண்கெழு ஞாலம்.
(12)

     (ப - ரை) நுடங்க (2) எனவும் உரற (4) எனவும் நின்ற
வினையெச்சங்களை நூறி (9) என்னும் வினையொடு முடிக்க.

     புகன்மறவரொடு என்னும் ஒடுவை (8) வாளொடு (5) வேலொடு (6)
மாவொடு (7) என எங்கும் கூட்டுக.

     வாள். வேல். மாவென நின்ற மூன்றும் ஆகுபெயர்.

     9. நூறியென்பது ஈண்டுக் கொன்றென்னும் பொருண்மைத்து.

     9-10. பகைவர் கெடுகுடி பயிற்றியவென்றது படுபிணம் பிறங்கப்
பகைவரை நூறியப்பின் அப்பகைவருடைய கெட்டுப்போன குடிமக்களை
அவர் நாட்டிலே பயின்று வாழ்வாராகப் பண்ணிய வென்றவாறு.

     இனிப் பகைவருடைய கெட்ட குடிகளை வேற்றுநாட்டிலே பயிலப்
பண்ணின வென்றுமாம். மன்ற என்பதனை (12) அசைவில் கொள்கை
யராகலின் (11) என்பதனொடு கூட்டுக.

     12. 1பொன்ஞாலமன்றி இம் மண்ஞாலமுழுதும் ஆண்டாரென்பது


     1பொன்ஞாலம் - தேவருலகம்.