பக்கம் எண் :

198

தோன்ற மண்கெழு ஞாலமென்ற இச்சிறப்பலானே இதற்கு. “மண் கெழு
ஞாலம்
” என்று பெயராயிற்று.

     13. நிலம் பயம் பொழியவென்றது சிலர் அரசு செய்யுங்காலங்களில்
மழையும் நீரும் குறைவின்றியிருந்தும் எவ்விளைவும் சுருங்கவிளையும்
காலமும் உளவாம்; அவ்வாறன்றி நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக
விளையவென்றவாறு.

     சுடர் சினம் தணியவென்றது 1திங்கள் மும்மாரியும் பெய்து மழை
இடையறாது வருகின்றமையின் சுடர் சினந் தணிந்தாற்போன்று
தோற்றவென்றவாறு.

     14. வெள்ளியென்றது வறிதுவடக் கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி (பதிற்..
24 : 24) என்றவாறு.

     பயம்கெழு ஆநியம் நிற்கவென்றது அவ்வெள்ளி மழைக்கு 2உடலான
மற்றைநாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாட்களிலே நிற்க வென்றவாறு.
15. விசும்புமெய் அகலவென்றது அம்மழையில்லாமைக்கு உற்பாதமாகிய
3தூமத்தோற்றமின்மையான். ஆகாயவெளி தன்வடிவு பண்டையில் அகன்றாற்
போலத்தோன்றவென்றவாறு.

     பெயல் புரவு எதிரவென்றது மழை இவ்வுலகினை யானே
புரப்பேனென்று 4ஏறட்டுக்கொண்டாற்போல நிற்பவென்றவாறு.

     16. நால்வேறு நனந்தலை ஓராங்கு தந்தவென்றது நாலுதிசையும் ஒன்று
போலே பகையின்றி விளங்கவென்றவாறு.

     கொற்றவேந்தே (10) இலங்குகதிர்த் திகிரியினையுடைய நின் முன்னோர்
(17) நிச்சயமாக (12) நின்னைப்போல் அசைவில்லாத மேற்கோளை
யுடையராகையாலே (11) இம்மண்ஞாலத்தினை (12) நிலம் பயம் பொழிதல்
முதலாக (13) நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்தல் (16) என்பது ஈறாக
எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக அசைவின்றி (11) ஆண்டோராவர்
(12); அவரல்லார் இம்மண்ஞாலத்தின் ஒரோவிடங்களை ஆளுவ தல்லது
5முழுதும் ஆளுதல் கூடாதென்றேயெனக் கூட்டிவினை முடிவு செய்க.

     11. 'ஆண்டோரசையாது' என்பது பாடமாக்கி அதற்கேற்ப உரைப்பாரும்
உளர்.


     1"முடிபுனைந்தசீர் மன்னவர் நெறியினான் முன்னவர் தவத்தாற் பைந்.
தொடிம டந்தையர் கற்பினான் மதிதொறுஞ் சொரிதரு மும்மாரி (குற்றாலப்.
திருநாட்டுச். 39); "திங்கண் மும்மாரி பெய்க" (
சீவக. நூலிறுதிச் செய்யுள்)

     2உடல் - ஆதாரம்.

     3"மைம்மீன் புகையினுந் தூமந்தோன்றினும்" (புறநா. 117 : 1); "கரியவன்
புகையினும் புகைக்கொடி தோன்றினும்`` (
சிலப். 10 : 102)

     4"மரங்களும் பல்லுயிர்க்கும் தன் பயன் கொடுத்தலை ஏறட்டுக்
கொண்டு
தழைப்ப’ (மதுரைக். 12. ந.)

     5இது. "வையங் காவலர் வழிமொழிந் தொழுகப். போகம் வேண்டிப்
பொதுச்சொற் பொறாஅ திடஞ்சிறி தென்னு மூக்கந் துரப்ப. ஒடுங்காவுள்ளத்
தோம்பா வீகைக். கடந்தடு தானைச் சேர லாதனை" (
புறநா. 8 : 1 - 5)
என்பது நினைப்பிக்கின்றது.