பக்கம் எண் :

199

     இதனாற் சொல்லியது அவன் ஆள்வினைச்சிறப்பினை அவன்
குடிவரலாற்றோடு படுத்துச் சொல்லியவாறாயிற்று.

     'எறிந்துசிதைந்த' (5) என்பது முதலாக, 'மறவரொடு' (8) என்பது ஈறாக
நான்கடி வஞ்சியடியாய் வந்தமையான் வங்சித்தூக்குமாயிற்று. அவற்றுள்
முன்னின்ற 1மூன்றடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச் சீர்களாகவும் 2மற்றையடியின்
ஈற்றுக்சீர் பொதுச்சீரகாவும் இட்டுக் கொள்க.

     'நின்போல்' (1) என்றது கூன்.

     (கு - ரை) 1-2. மலையை ஒத்த யானையின் மேல் எடுத்த வானத்தை
அளாவிய வெற்றிக்கொடி, மலையின் மேலுள்ள அருவியைப் போல
இடந்தோறும் அசைய.

     யானைக்கு மலையும் அதன்மேலுள்ள கொடிக்கு அருவியும் உவமை;
"களிறணி வெல்கொடி கடுப்பக் காண்வர, ஒளிறுவன விழிதரு முயர்ந்து தோன்
றருவி", "பெருவரை யிழிதரு நெடுவள் ளருவி, ஓடை யானை யுயர்மிசை
யெடுத்த, ஆடுகொடி கடுப்பத் தோன்றும்' (அகநா. 162 : 22 - 3,
358 : 12 - 4)

     3-4. கடல்போலப் பரந்த சேனையினிடத்தே கடிய குரலையுடைய
முரசங்கள் காற்றுப் பொருந்திய கடலைப்போலக் கடுமையுடையனவாய் முழங்க
(பதிற். 68 : 1 - 3)

     யானைக்குக் கடல்: "உரவுக்கடலன்ன தாங்கருந் தானையொடு" (பதிற்.
90 : 31)்; "கடன்மரு டானை, மட்டவிழ் தெரியன் மறப்போர்க் குட்டுன்"
(அகநா, 212 : 15 : 6)

     5-8. பகைவரை வெட்டிச் சிதைந்த வாளையுடைய வீரரோடு, இலை
வடிவம் ஆராய்ந்து அமைக்கப்பட்ட வேலையுடைய வீரரோடு, பகைவர்மீது
பாய்ந்து வன்மை குறைந்த குதிரை வீரரோடு ஆராய்ந்து தெரியப்பட்ட
போரை விரும்புதலையுடைய மற்ற வீரரோடு.

     மறவரொடு என்னும் ஒடுவை வாள், வேல், மாவென்பவற்றோடும்
கூட்டுக. வாள் முதலிய மூன்றும் அவற்றையுடைய வீரரைக் குறித்தலின்
ஆகுபெயர்.

     9-10. இறந்த பிணம் உயரும்படி கொன்று பகைவருடைய கெட்ட
குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழப்பண்ணிய வேந்தே.

     நுடங்க (2) உரறப் (4) பிறங்க நூறிப் (9) பயிற்றிய (10) என முடிக்க.

     11-2, நின்னைப்போலத் தெளிவாக மாறுதல் இல்லாத கொள்கை
யுடையராதலால், நடுக்கமில்லாமல் இந்த அணுச்செறிந்த மண்ணுலகத்தை
ஆண்டனர்.

     ஆண்டோர் (12) முந்திசினோர் (17) என்பதனோடு முடியும்.

     13-6. முன்னோர் ஆட்சியின் சிறப்பு.

     13. நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய, காலத்தே
தவறாமல் மழை பெய்தலால் சூரியன் வெப்பந் தணிந்தாற்போன்று விளங்க.

     14, உலகத்திற்குப் பயன்பொருந்திய சுக்கிரனென்னும் கோள்
மழைக்குக்காரணமான மற்ற நாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல
நாட்களிலே நிற்க (பதிற், 13 : 25)


     1மூன்றடிகளென்றது 5 - 7-ஆம் அடிகளை.

     28-ஆம் அடி.