21. கவிர்ததை
சிலம்பிற் றுஞ்சுமென்றது, ஆண்டு உறையும்
1ஆசிரியராணையானே முருக்கென்னும் முள்ளுடை மரமும், "மயிர்நீப்பின்
வாழாக்கவரிமா". (குறள்,
969) என்று சிறப்பிக்கப்பட்ட தன் மயிர்க்கும்
வருத்தஞ் செய்யாமையால், அக்கவிர் செறிந்த சிலம்பின் கண்ணே இனிதாக
உறங்குமென்றவாறு.
22. அருவியொடு நரந்தம் கனவுமென்றது அவ்வாரியராணையானே
பிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற்காலத்துத் தான் நுகர்ந்த
அருவியையும் நரந்தத்தையுமே களவினும் காணுமென்றவாறு.
24. குமரியொடுவென்னும் ஒடு எண்ணொடு. ஆயிடை யென்றது இமயம்
குமரியாகிய அவற்றுக்கு இடையென்றவாறு; அவ்வென்னும் வகரவீற்றுப் பெயர்
ஆயிடையென முடிந்தது.
25. 2'மன்' என்றதனை அரசென்றதுபோல அஃறிணைப்பெயராக்கி அம்
மன்களில் மீக்கூறுமெனக் கொள்க.
மறந்தபக் கடந்து (25) முழங்குபணை செய்த (26) என மாறி முடிக்க;
3 இங்ஙனம் மாறாது எருத்த மேல்கொண்டு (14) என்னும் வினையொடு மாறி
முடிப்பாரும் உளர்.
சேரலாத (16), கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந்தாங்கு (6) யானை (18)
எருத்தமேல்கொண்டு பொலிந்தநின் (19) பலர்புகழ் செல்வம் கண்டிகும் (20)
என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது அவன் வெற்றிச் செல்வச் சிறப்புக்
கூறியவாறாயிற்று.
(குறிப்புரை) 1.
வரை - மலை. மருள்: உவம உருபு. புணரி-அலை;
அலைக்கு மலை: "மலைக்குநிக ரொப்பன வன்றிரைகள்" (தே.
சுந்தர.
அஞ்சைக்களம்.) பிசிர் - துளி (பதிற்.
17 : 4)
2.
அட்ட - சிதைத்த. துளங்கு - அசைகின்ற. சூல் - கருப்பம்; இங்கே
நீருக்காயிற்று, "கமஞ்சூன் மாமழை" (முருகு.
7) என்புழிப்
போல.
3.
பரப்பினையுடைய கடல்.
4. அணங்குடை - துன்பத்தைச் செய்தலையுடைய. ஏமம் புணர்க்கும் -
பாதுகாவலாகச் சேர்த்துவைத்த.
5. முழுமுதல் - அடிமரம்; இங்கே மாவினது அடிமரம்; பேரிசை:
முருகு. 268.
4
- 5. 'அவுண ரெல்லாரும் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி
தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்ததொரு மாவை
வெட்டினான் என்றவாறு' (முருகு. 59 - 60,
ந.)
6. விறல்வேள் :
முருகு.
262. களிறு - முருகக் கடவுளின் ஊர்தியாகிய
யானை; பிணிமுகம் என்று வழங்கப்படும் (முருகு.
247, ந.)
7.
வாய் என்றது முனையை. எஃகம் - வேல். விலங்குநர் - குறுக்கே
தடுத்து நிற்கும் பகைவரை.
1ஆரியர்
என்றது இங்கே முனிவரை.
2மன் - சொல்லால் 'அஃறிணை;
பொருளால் உயர்திணை (தொல்.
கிளவி. 56)
3இரண்டாவது முடிபே பொருத்தமாகத் தோற்றுகின்றது.
|