|
15.
தூமகேது முதலியன இல்லாமையால் ஆகாயம் தன் வடிவம்
அகன்றாற்போல விளங்க. மழை உலகத்தைத்தானே காத்தலை மேற்
கொண்டாற்போல விளங்க; "நிலனு மரனும் பயனெதிர்பு நந்த" (மதுரைக்,
12)
16.
நான்காகிய வேறுபட்ட அகன்ற திசைகளும் ஒன்றுபோலப்
பகையின்றி விளங்க. 17. விளங்குகின்ற கிரணத்தையுடைய
ஆஞ்ஞாசக்கரத்தையுடைய நின் முன்னோர்.
முந்திசினோர்
(17) பொழியத் தணிய (13) நிற்ப (14) அகல எதிர (15)
நந்த (16) ஆண்டோர் (12) என முடிவு செய்க.
மு.
இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பது படக்கூறிய இயன் மொழி
வாழ்த்து (தொல். புறத். 35. ந.)
(பி
- ம்) 3. கடல்போறானைக் (9)
15.
தூமகேது முதலியன இல்லாமையால் ஆகாயம் தன் வடிவம்
அகன்றாற்போல விளங்க. மழை உலகத்தைத்தானே காத்தலை மேற்
கொண்டாற்போல விளங்க; "நிலனு மரனும் பயனெதிர்பு நந்த"
(மதுரைக், 12)
16.
நான்காகிய வேறுபட்ட அகன்ற திசைகளும் ஒன்றுபோலப்
பகையின்றி விளங்க. 17. விளங்குகின்ற கிரணத்தையுடைய
ஆஞ்ஞாசக்கரத்தையுடைய நின் முன்னோர்.
முந்திசினோர்
(17) பொழியத் தணிய (13) நிற்ப (14) அகல எதிர
(15) நந்த (16) ஆண்டோர் (12) என முடிவு செய்க.
மு.
இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பது படக்கூறிய இயன் மொழி
வாழ்த்து (தொல். புறத். 35. ந.)
(பி
- ம்) 3. கடல்போறானைக் (9)
70.
|
களிறுகடைஇய
தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமந்ததைந்த வேல்
கல்லலைத்த தோள் |
5
|
வில்லலைத்த
நல்வலத்து
வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகி ழூசி வெண்டோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மலைந்து மதஞ்செருக்கி
உடைநிலை நீல்லமர் கடந்து மறங்கெடுத்துக் |
10
|
கடுங்சின
வேந்தர் செம்ம றொலைத்த
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொற் கேளாப் புரை தீ ரொண்மைப்
பெண்மை சான்று பெருமட நிலைஇக் |
15
|
கற்பிறை
கொண்ட கமழுஞ் சுடர்நுதற்
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கை சுற்றஞ் சுற்ற
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை |
| 20 |
வணங்கிய
சாயல் வணங்கா வாண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்
மாடோ ருறையு முலகமுங் கேட்ப
இழுமென விழிதரும் பறைக்குல லருவி |
|