25
|
முழுமுதன்
மிசைய கோடுதொறுந் துவன்றும்
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே. |
துறை
- செந்துறைப் பாடாண்பாட்டு, வண்ணம் - ஒழுகுவண்ணம்,
தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், பெயர் - பறைக்குர லருவி (24)
(ப
- ரை) 3. சமம் ததைந்த வேலென்றது மாற்றார் செய்யும் சமங்கள்
சிதைதற்குக் காரணமாகிய வேலென்றவாறு.
வேலென்றது வேல்வென்றியினை.
4, கல்லலைத்த
தோளென்றது வலியுடைமையாற் கல்லையலைத்த
தோளென்றவாறு. ...............................................................................................................
.....................தாகவெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இதனாற் சொல்லியது
அவன் வென்றி கூறிய திறத்தானே அவற்குள்ள
சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று.
(கு
- ரை) 1. போர்க் களத்தே ஆண் யானையைச் செலுத்திய
தாளையும். மு. புறநா. 7 : 1.
2. குதிரைகளோடு
பொருத காலின் விளம்பையும்; "கடுமாகடைஇய
விடுபரி வடிம்பின்" (புறநா. 378 : 4)
3. பகைவர் செய்யும்
போர் கெடுதற்குக் காரணமான
வேல்வெற்றியையும். 4. உலகக்கல்லை வருத்திய தோளையும்; "ஆயிரர்,
தொட்டெடுக்க லாவுலம்மொர் தோளி னேந்தி யாடினான்" (சீவக.
690). 5.
வில்லை வருத்திய நல்ல வெற்றியையும்.
6-7. வண்டு பாட்டைப்
பாடுதலில்லாத குளிர்ந்த பனையினது குவிந்த
அரும்பு போன்ற கூர்மையையுடைய வெள்ளிய குருத்தை அணிந்து கொண்டு;
"வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசி வெண் டோடு"
(புறநா. 100 : 3 - 4)
8. கண்ணுக்கு
இனிதாகிய சுனையிலுள்ள குவளையாகிய நீர்ப்பூவைச்
சூடி மதம் மிக்கு; "வெண்டோட் டசைத்த வொண்பூங் குவளையர்" (பதிற்.
58 : 2)
9. பகையரசருடைய
நிலையாகிய நல்ல போரை வென்று அவரது
மாறுபாட்டைக் கெடுத்து. நிலை நல்லமர் - நாடோறும் செய்து வரும்
நல்ல போர் (பதிற். 4-ஆம் பதிகவுரை)
10-11. மிக்க
சினத்தையுடைய பகையரசரது தலைமையை அழித்த
வென்றி உண்டாதற்குக் காரணமான சிறந்த கழலை அணிந்த வீரர்களுடைய
தலைவனே. கழலணிதல் வெற்றிக்குக் காரணமாதல்: "கடுங்கண் மறவன்
கழல்புனைந்தான் காலை, நெடுங்கடைய நேரார் நிரை" (பு.
வெ. 2)
தோடுகொண்டு
(7) செருக்கிக் (8) கடந்து கெடுத்துத் (9) தொலைத்த
(10) வயவர் பெரும என முடிக்க. வயவர் பெரும: அனைத்தும் ஒரு பெயர்.
1-11. தாளையும்,
வடிம்பையும், வேலையும், தோளையும் வலத்தையும்
உடைய பெரும என இயையும்.
12. விளையாட்டிடத்தும்
பொய் கூறுதலை யறியாமைக்குக் காரணமான
வாய்மையையும்; நகை - விளையாட்டு; "நகையுள்ளு மின்னா திகழ்ச்சி"
(குறள். 995)
|