(பி
- ம்) 6. கவண்டிசை. 26. நேருயர் நெடுவரை. (10)
இதன் பதிகத்து
ஒரு தந்தை (2) என்றது பொறையன் பெருந்தேவியின்
பிதாவுடையது ஒரு பெயர்.
6-7. வேள்வி
ஆக்கிய பொழுதின் அறத்துறை போகியென்றது யாகம்
பண்ணின காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து
முடித்தென்றவாறு.
8. மாயவண்ணனை
மனனுறப்பெற்று என்றது திருமாலை வழிபட்டு
அவனுடைய மனம் தன்பாலே ஆம்படி பெற்றென்றவாறு.
9. ஒகந்தூரீத்து
என்றது அம்மாயவண்ணனுக்கு ஒகந்தூரென்ற ஓர்
ஊரைக் கொடுத்தென்றவாறு.
10. புரோசு மயக்கி
யென்றது தன் புரோகிதனிலும் தான் அறநெறி
யறிந்தென்றவாறு. சிறுபுறமென்றது சிறுகொடை.
(பதிகம்)
|
மடியா
வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி |
5
|
வெருவரு
தானை கொடுசெருப் பலகடந்
தேத்தல் சான்ற விடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதி னறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றவற்
கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப் |
10
|
புரோசு
மயக்கி
மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய |
செல்வக்கடுங்கோ
வாழியாதனைக் கபிலர் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: புலாஅம்பாசறை, வரைபோலிஞ்சி, அருவியாம்பல், உரைசால்
வேள்வி, நாண்மகிழிருக்கை, புதல்சூழ் பறவை, வெண் போழ்க்கண்ணி,
ஏமவாழ்க்கை, மண்கெழுஞாலம், பறைக்குரலருவி, இவை பாட்டின் பதிகம்.
பாடிப் பெற்ற
பரிசில்: 1சிறுபுறமென நூறாயிரங்காணம் கொடுத்து
2நன்றாவென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம்
காட்டிக் கொடுத்தான் அக்கோ.
செல்வக் கடுங்கோ
வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
(கு
- ரை) 1. சோம்பியிராத ஊக்கத்தால் பகைவரைத் தன்னோடு
சேர்த்த; உள்ளம் - ஊக்கம்; "உள்ள முடைமை யுடைமை" (குறள்,
592,
பரிமேல்.). 2. நீண்ட நுண்ணியவான நூற்பொருளைக்
கேட்டலுடைய; நுண்
கேள்வி: கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல் ஏற்றப்பட்டது
(குறள். 419, பரிமேல்.)
1சிறுபுறம்-சிறுகொடை;
அறப்புறம் (சீவக.76) என்புழிப்போல.
2பதிற்.
85 : 13.
|