பக்கம் எண் :

204

     4. நாடுகளில் ஊர்களை உண்டாக்கிப் பகைவரை ஓடச் செய்து.

     5. பகைவர் அஞ்சத்தக்க சேனையால், பல போர்களை வஞ்சியாமல்
எதிர்நின்று வென்று.

     6-7. புகழ்தலமைந்த செல்வத்தையுடைய வேள்விகளைச் செய்த
பொழுதில் மற்ற அறத்தின் கூறுபாடுகளையும் செய்து முடித்து.

     8. கரிய நிறத்தையுடைய திருமாலைத் தன் மனதிலே மிகப் பெற்று.

     8-9. அத்தெய்வத்திற்கு அக்கினிகோத்திரத்திற்குரிய நெல்லின்
விளைவையுடைய ஒகந்தூரென்னும் ஊரைத் தேவதானமாகக் கொடுத்து;
ஓத்திரநெல் என்றது இராசான்னமென்னும் நெல்லை; 'பறவைப்
பெயர்ப்படுவத்தம் - பறவையின் பெயரைப் பெறுகின்ற நெல்லு: என்றது
இராசன்ன மென்னும் பெயர் பெறுகின்ற நெல்லென்றவாறு. ஆகுதி
பண்ணுதற்கு இந்த நெல்லுச்சோறே சிறந்ததென்று இதனைக் கூறினார்; இனி
மின்மினி நெல்லென்பாரும் உளர்; இப்பெயர் வழக்கின்மையும் ஆகுதிக்குச்
சிறவாமையும் உணர்க' (பெரும்பாண். 305, ந.) என்பது இங்கே அறிதற்
பாலது.

     10. தன் புரோகிதனைக் காட்டிலும் தான் அறநெறியிலே மேம்பட்டு;
புரோசு: தொல். கிளவி. 56, சே, ந,

     "மெய்யூ ரிமைச்சியன் மையூர் கிழானைப், புரையறு கேள்விப் புரோசு
மயக்கி" (பதிற. 9-ஆம் பதிகம், 11 - 2)

     11. வளத்தையுடைய மனத்தொடு குற்றமில்லாமல் விளங்கிய.

                 ஏழாம்பத்து முற்றிற்று

                  எட்டாம் பத்து

71. அறாஅ யாண ரகன்கட் செறுவின்
அருவி யாம்ப னெய்தலொ பரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்
 5 அம்பண வளவை யுறைகுவித் தாங்குக்
கடுந்தே றுறு கிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாரின்
அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே
ஊரெரி கவா வுருத்தெழுந் துரைஇப்
 10 போர்சுடு கமழ்புகை மாதிர மறைப்ப
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில்
ஆரெயிற் றோட்டி வௌவினை யேறொடு