பக்கம் எண் :

205

கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து
 15 புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்து
விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு வற்றென
 20 அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதற்
பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஅர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
 25 உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி
அறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் -
ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தூக்கு - நெந்தூக்கு. பெயர்
- குறுந்தாண் ஞாயில்.
(12)

     (ப - ரை) 2. 1அருவியாம்பல் - நீரின் ஆம்பல்; என்றதனாற் பயன்
நீர்க்குறைவற்ற ஆம்பலென்பதாம்; எண்ணின் ஆம்பலை
நீக்குதற்கென்பதுமொன்று.

     ஆம்பலொடு நெய்தலோடு (2) நெல்லை (4) அரிந்து (2) என்று கொள்க.

     அரிந்து (2) பகடு உதிர்த்த (4) எனக் கூட்டிப் பகட்டானென உருபு
விதிக்க.

     3. செறுவினை மகளிர் மலிந்த வெக்கையென்றது உழவர் பெண் மக்கள்
விளையாடுதற்கு வயலிற் பயிர்கொள்ளாததோரிடம் இன்மையின். ஆண்டு
அவர்கள் மிக்க களமென்றவாறு. வெக்கை - கடாவிடுங்களம்.

     4. நெல்லிற்கு மென்மை - சோற்றது மென்மை. செந்நெலென்றது
2செந்நெல்லென்னும் சாதியை. 5. அளவைக்கென நான்காவது விரிக்க.

     6. கடுந்தேறு உறு கிளை - கடிதாகத் தெறுதலையுடைய மிக்க
குளவியினம். மொசிந்தனவென்றது மொய்த்தனவாயென்னும் வினையெச்சமுற்று.
9, உருத்து எழுந்து உரைஇ ஊர் எரி கவரவெனக் கூட்டுக.

     ஊரெரி கவரப் (9) போர்சுடு கமழ்புகை மாதிரமறைப்பத் (10) தோட்டி
வௌவி (13) என முடிக்க.


     1பதிற் .63 : 19 ல் வரும் 'அருவியாம்பல்' என்பதற்கு வேறு உரை
கூறினார்
.
     2வெண்ணெல்லும் உண்டாதலின் செந்நெல்லென்னும் சாதி என்றார்.