பக்கம் எண் :

206

     11. 1தோன்றலீயாதென்றது தோன்றாதென்னும் வினையெச்சத்திரி சொல்;
தோன்றலீயாமலெனத் திரிக்க.

     12. குறுந்தாண் ஞாயிலென்றது இடையிடையே மதிலின் அடியிடங்களைப்
பார்க்க அவற்றிற் குறுகிக்குறுகி யிருக்கும் படியையுடைய ஞாயிலென்றவாறு.

     இவ்வாறு கூறின சாதிப்பண்பானும் படியைத் தாளென்று கூறின
படியானும் இதற்கு, 'குறுந்தாண் ஞாயில்' என்று பெயராயிற்று.

     13. வௌவினையென்றது வினையெச்சமுற்று.

     14. ஆயம் தழீஇயென்றது ஆயங்களை நீ 2புலவுவில்லிளையர்க்குக்
கொடுப்ப (15) என்றவாறு. தரீஇயென்பதனைத் தரவெனத் திரிக்க.

     15. இளையர் அங்கை விடுப்பவென்றது இளையர் அவ்வாயத்தைத்
தங்கள் அங்கையினின்றும் பிறர்க்கு விடுப்பவென்றவாறு.

     16. கயிறாடாவென்னும் பெயரெச்சமறையை வைகலென்னும்
தொழிற்பெயரோடு முடிக்க. வைகல் - கழிதல். வைகற்பொழுது:
இருபெயரொட்டு.

     17. வாழ்நர் - வாழ்பவர்; இடையர். பயத்தானென விரிக்க.
கழுவுளாவான் அவ்விடையர்க்குத் தலைவனாய் அக்காலத்துக் குறும்பு
செய்திருந்தான் ஒருவன். முன்னர் எயில் (13) என்றது அவன் தனக்கு
அரணாகக் கொண்டிருந்த மதிலினை.

     18. வேறுபுலம் பதி பாழாகப் படர்ந்தென்றது அக்கழுவுள் தலை
மடங்குகையாலே அவனை விட்டு வேறு திறையிடாக் குறும்பர் நாட்டிலே
அந்நாட்டுப்பதி பாழாகச் சென்றவாறு.

     படர்ந்து (18) திறைகொண்டு பெயர்தி (24) எனக் கூட்டுக.

     19. 3விருந்தின் வாழ்க்கை - நாடோறும் புதிதாகக் தாங்கள் தேடுகின்ற
பொருள். பெருந்திரு - முன்னே தேடிக் கிடந்த பொருள். அற்றெனவென்றது
அற்றதெனக் கருதியென்றவாறு. அற்றதென்பது கடைக்குறைந்தது.

     23. 4பாசம் - பேய். 25. உரவரையும் மடவரையும் என்னும்
5இரண்டாவது விகாரத்தால் தொக்கது. அறிவு - அவர்களறிவு.

     27. வாழுமோரென்புழி, உம்மை அசைநிலை.

     ஆரெயிற்றோட்டி வௌவி அதனையுடைய (13) கழுவுள் தலைமடங்கு
கையாலே (17) வேறுபுலம் படர்ந்து அவ்வேறுபுலத்து நினக்கு (18)
யானையோடு அருங்கலம் திறையிடார்தம் (21) விருந்தின் வாழ்க்கையொடு
பெருந்திருவற்றதெனக் கருதித் தங்கள் (19) மெய்ந்நடுக்கமிக்கு நின்னை
அணங்கெனக் கருதிப் பலபடப் பரவுதலான் (22) பேய்தான் பற்றினாருயிரை
வௌவாது தனக்கு அவர் பலியிட்டுழி அப்பலிகொண்டு பெயருமாறுபோல
நீயும் அவருயிரை வௌவாது (23) திறைகொண்டு பெயராநின்றாய் (24);
இஃதன்றே இதுபொழுது நீ செய்கின்றது; நின்னை உடற்றியோர்(8) கடுந்தேறு
உறுகிளை துஞ்சும் (6) கூடு கிளைத்த இளந்துணைமகாரைப்போலப் (7)
பெருமானே, அலந்தார்கள் (8); இனிமேல் உள்ளத்து உரவரையும் மடவரையும்
அவரவர் அறிவினைத் தெரிந்து எண்ணி (25) அவர்களிடத்துச் செய்யும்
அருளறிந்து அருளாயாயின் (26), நெடுந்தகாய், இவண் வாழ்பவர் யார் (27)?
நின் ஊழி வாழ்க. (24) எனக் கூட்டி வினை முடிவு செய்க.



     1பதிற. 12 : 7, உரை.
     2'ஒள்வான் மலைந்தார், ஒற்றாய்ந்துரைத்தார், புள்வாய்ப்பச் சொன்னார்'
(பு. வெ. 14) முதலியோர.்
     3விருந்து-புதுமை (தொல். செய்.239)
     4சீவக.653.
     5தொல். தொகைமரபு, 15.