ஏறும்
ஆநீரையும்: "விடையாயம்" (பு. வெ. 1)
15. எய்த அம்பினையே
மீட்டும் எய்தலால் புலால் நாறும்
வில்லையுடைய வீரர் தம் அழகிய கையினின்றும் அவ்வாயுதத்தை விடுப்ப.
புலவுவில் (பதிற். 15 : 12, உரை).
இளையர் - வீரர்; "இளையோர்க்கு மலர்ந்த
மார்பினை" (சிறுபாண். 232)
16. மத்தினிடத்தே
கயிறு ஆடாத, கழிதலையுடைய பொழுதுகளை
நினைத்து; "மத்துரறியமனை யின்னிய மிமிழா" (பதிற்.
26 : 3)
17. ஆனினது பயத்தால்
வாழ்கின்ற இடையர் தலைவனான கழுவு
ளென்பவன் தலைவணங்குதலால்; ஆன்பயம் வாழ்நர்: "ஆய்மகள், அளவிலை
யுணவிற் கிளையுட னருத்தி" (பெரும்பாண்.
162-3); "அளைவிலை யுணவி
னாய்ச்சியர் தம்மொடும்" (சிலப். 16:3).
மடங்க: காரணப் பொருளில் வந்தது.
கழுவுளது ஊர் காமூரென்றும், அது பதினான்குகுடி வேளிரால்
அழிக்கப்பட்டதென்றும் தெரிகின்றது (அகநா.
135 : 11 - 3, 365 : 11 - 2).
"பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று" (பதிற்.
88 : 7)
18 ஊர்கள் பாழாகும்படி
வேறு நாடுகளிலே சென்று.
19. புதிதாகத்
தாம் தேடும்செல்வத்தோடு தம் முன்னோர் தேடி
வைத்த பெரிய செல்வம் அற்றதெனக் கருதி. 20. தாங்குதற்கு அரிய போரில்
அரியநிலையைத் தடுத்த, புள்ளிகள் பொருந்திய நெற்றியையுடைய.
21. பெரிய ஆண்யானைகளோடு
அருமையான ஆபரணங்களைத்
திறையாகத் தருதலில்லாதவருடைய (பதிற்.
90 : 6 - 7)
தரார் (21)
விருந்தின் வாழ்க்கையோடு பெருந்திரு அற்றென (19) என
இயைக்க.
22. உடம்பு நடுங்குதல்
மிக்கு, வருத்தும் தெய்வமென்று நின்னைப்
பரவுதலால்.
23-4. தன்னாற்
பற்றப்பட்டாரது உயிரைக் கொள்ளாமல் தனக்கு இட்ட
பலியை மட்டும் ஏற்றுக்கொண்டு நீங்கும் பேய்போலத் திறைக் கொண்டு நீ
மீண்டு செல்கின்றாய்; பால்வரை தெய்வத்தால் நினக்கு அறுதியிடப்பட்ட நின்
நாள்கள் வாழ்க. பேய் பலியைக் கொள்ளுதல்: மணி.
7 : 84 - 5. நின்னூழி
வாழ்க: மதுரைக். 781 - 2.
பேய் பலியைப்
பெற்றே போதலிற் சுரமஞ்சரியின் இன்பத்தைப் பெற்றே
போகின்ற சீவகனுக்கு உவமையாயிற்றென்பதற்கு மேற்கொள் (சீவக.
2010, ந.)
25-6. அறிவுடையோரையும்,
அறிவில்லாதோரையும் அவர்களுடைய
அறிவை ஆராய்ந்து நினைத்து அறிந்தனையாய் அருள் செய்யா
தொழிவாயாயின். உரவர், மடவர்: பதிற்.
73 : 1.
27. நெடுந்தகாய்,
இவ்வுலகத்தில் வாழ்வோர் யார்?
மு.
'பிண்டம் மேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகை கண்டு
அஞ்சிக் கருமச் சூழ்ச்சியால் திறைகொடுப்ப அதனை வாங்கினார்க்கு
உளதாகிய விளக்கம்' (தொல்: புறத்.
8, ந.)
(பி
- ம்) 3. செறிவளை. 17. தலைமயங்க. 18. வேற்றுப்புலம் 22.
பராலின். (1)
|