பக்கம் எண் :

209

72.



இகல்பெரு மையிற் படைகோ ளஞ்சார்
சூழாது துணித லல்லது வறிதுடன்
காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து
 5




மன்பதை காப்ப வறிவுவலி யுறுத்து
நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின்
பண்புநன் கறியார் மடம்பெரு மையிற்
றுஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை யொராஅநீர் ஞெமரவந் தீண்டி
 10




உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்
வரையா மாதிரத் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துப்
பொங்கு பிசிர்நுடக்கிய செஞ்சுடர் நிகழ்வின்
 15

மடங்கற் றீயி னனையை
சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே.

     துறை - செந்துறைப் பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுகுவண்ணம்.
தூக்கு - செந்தூக்கு. பெயர் - உருத்தெழு வெள்ளம்.
(10)

     (ப - ரை) 1. இகல் பெருமையின் - இகலானது பெரிதாகையானே;
இகலென்னும் எழுவாய்க்குப் பெருமையை நிலைப்பயனிலையாகக் கொள்க.
அஞ்சாரென்றது வினையெச்சமுற்று.

     படைகோளைத் (1) துணிதல் (2) எனக் கூட்டுக.

     2-3. உடன் காவலெதிராரென்றது பலரும் தம்முட்கூடியும் காக்க
மாட்டாரென்றவாறு. 5. மன்பதை - மக்கட்பன்மை.

     அறிவுவலியுறுத்தும் (5) சான்றோர் (6) எனக் கூட்டுக.

     ஈண்டுச் சான்றோரென்றது மந்திரிகளை.

     மடம்பெருமையையும் (7) இகல்பெருமையைப் (1) போல எழுவாயும்
பயனிலையுமாகக் கொள்க.

     8. துஞ்சல் - எல்லாவுயிரும் இறந்துபடுதல். பகலென்றது ஊழியை.
மாலையென்றது ஊழிமுடிவினை. 9. ஒராஅ என்றதனை ஒருவவெனத் திரித்து
ஈண்டியென்றதனையும் ஈண்டவெனத் திரிக்க.

     10. உருத்தெழு வெள்ளமென்றது பல்லுயிரையும் ஒருங்கு தான்
கொல்லுங் கருத்துடையது போலக் கோபித்தெழு வெள்ளமென்றவாறு.

      இச்சிறப்பானே இதற்கு, 'உருத்தெழு வெள்ளம்' என்று பெயராயிற்று.

     வெள்ளம் (10) பரந்து (11) என்றதனைப் பாக்கவெனத் திரித்து அதனை
நுடக்கிய (14) என நின்ற செய்யியவென்னும் வினையெச்சத்தொடு முடித்து
அதனைச் சுடர்நிகழ்வு (14) என்னும் தொழிற்பெயரோடு முடித்து, வெள்ளம்
பரக்கையாலே அவ்வெள்ளத்தை மாய்க்கவேண்டிச்