பக்கம் எண் :

21

     8. அருநிறம் திறந்த - பிறரால் துளைத்தற்கரிய மார்பைத்
துளைத்ததனால் உண்டாகிய; நிறம் - உயிர்நிலையுமாம். புண்ணுமிழ் குருதி;
குறிஞ்சிப். 172. குருதியின் - இரத்தத்தால்.

     
9. மணிநிறம் - நீலமணிபோன்ற நிறம்.

     8 - 9. மார்பிலிருந்து வெளிப்பட்ட இரத்தத்தின் மிகுதியால் கழியிலுள்ள
நீர் தன் நீலநிறம் மாறிச் சிவப்பாயிற்றென்றபடி.

     10. போல - போலாக.
அரண் - பகைவரது மதில்.

     11. முரண் - வலி. ஊக்கலை - செலுத்தும் முயற்சியை யுடையாய்; விளி.

     12. மொசிந்து - மொய்த்து. கடம்பு: இப்பாட்டுடைத் தலைவனுக்குப் பகைவரான அரசர்களுள் ஒருவனது காவல் மரம்.

     13. கடியுடை முழுமுதல் - காவலையுடைய அடிமரம். ஏஎய் - ஏவி.

     14. வென்று - வஞ்சியாது எதிர் நின்று கொன்று. பணை செய்த
- முரசாகச் செய்த.

     12 - 4. பகைவரது காவல்மரத்தை வெட்டி அதைக்கொண்டு முரசு
செய்தல் மன்னர் இயல்பு; "கடம்பறுத் தியற்றிய வலம்படு வியன்பணை" என்பர்
பின்; 17 : 5; "கடம்பறுத் தியற்றிய பண்ணமை முரசு" (
அகநா. 347 : 4 - 5);
"உதியர், இடப்புண்ட பேரிஞ்சி வஞ்சியி லிட்ட, கடப்ப முதுமுரசங் காணீர்"
(
இராசராச. 87)

     கடம்பறுத்தது; பதிற். 12 : 3, 20:4; அகநா. 127:4;சிலப். 25:1.

    
15. நார் அரி நறவின் - பன்னாடையால் அரிக்கப்படுகின்ற
கள்ளையுடைய. ஆரம் - சந்தனம்; முத்துமாலையுமாம்.

     17. தார் - மாலை.

     20. கண்டிகும் - கண்டோம்;
பதிற். 43 : 31, உரை; "கண்டிகு மல்லமோ
கொண்கநின் கேளே" (
ஐங். 121)

    
17 - 20. யானைமேல் கொண்டு பொலிந்த நின் செல்வம் என்க.

     21. கவிர் - முள்ளு முருங்கை. கவரி - கவரிமான்.

     22. நரந்தம் - நரந்தப்புல்; இது நரந்தை எனவும் வழங்கும்; "நரந்தை
நறும்புன் மேய்ந்த கவரி"
(புறநா. 132 : 4)

     23. துவன்றிய - நிறைந்த. துவன்றுதல் நிறைவென்னும் குறிப்புணர்த்தும்
என்பதற்கு மேற்கோள்
(தொல். உரி.34, ந.; இ. வி. 290)

     23 - 4. இமயமும் குமரியும்:
மதுரைக். 70 - 71; புறநா. 17 : 1-2.

     25. மன் மீக்கூறுநர் - அரசர்களுள் உயர்த்துக் கூறுப்படுபவர்களுடைய.
23 - 5.
பதிற். 43: 7 - 9.

     மு. சேரனுக்கு
முருகக் கடவுளை உவமை கூறவந்த புலவர் கடலிற்
சென்று கடிமரந்தடிதலும், களிறூர்தலும் ஆகிய பொதுத் தொழில்களை
இருவர்க்கும் சார்த்தி உரைத்தனர்.

     (பிரதிபேதம்.)
4. ஏமம்புணர்காக்கும். 9. நீனிறம். 10. போலரண்.
13. றுமியவோஒய். 16. வேண்டுதானை. 25. மதந்தப. (1)