14.
பிசிரென்றது பிசிருடைய வெள்ளத்தை. நுடக்குதல் - மாய்த்தல்.
ஞாயிறு
பட்ட அகன்றுவரு கூட்டத்து (12) மடங்கற்றீ (15) என மாறிக்
கூட்டி, அவ்வெள்ளத்தை மாய்த்தற்கு ஆதித்தர் பன்னிருவரும் தோற்றின
பெரிய கூட்டத்தையுடைய வடவைத்தீயென உரைக்க. ஆதித்தர் கூட்டத்தை
இவன் படைத்தலைவர்க்கு உவமமாக் கொள்க.
அம்
சாறு புரையும் நின் தொழிலொழித்து (13) மடங்கற்றீயின்
அனையை (15) என மாறிக் கூட்டுக. அம் சாறுபுரையுந் தொழிலென்றது.
1அழகிய விழாப்போல எல்லார்க்கும் இன்பத்தைச் செய்யும் தொழிலென்றவாறு.
நின்னொடு
கறுத்தோர் (3) தம் மடம் பெருமையால் (7) நின் (3) முன்
குடிமுதல்வர்க்கு (4) அறிவுவலியுறுத்தும் (5) சான்றோரையொத்த நின் (6)
சூழ்ச்சிப்பண்புடைமை அறிகின்றிலர்; நீ தான் சூழ்ச்சியுடையையேயன்றிக் (7)
குருசிலே, நின் உடற்றிசினோர்க்குப் போர்செய்யுமிடத்து (16) மடங்கற்றீயின்
அனையை (15); அதனையும் அறிகின்றிலராதலால், அவர் தம் இகல்
பெருமையானே அஞ்சாராய்ப் படை கோளைத் (1) துணிதலல்லது (2)
நாட்டைச் (3) சிறிதும் உடன் (2) காவலெதிர் கொள்ளார் (3) எனக் கூட்டி
வினைமுடிவு செய்க.
இதனாற்
சொல்லியது அவன் சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிறப்பும்
உடன் கூறியவாறாயிற்று.
(கு
- ரை) 1-2. பகைமை பெரிதாகையினாலே அஞ்சாராகிப்
படை கொள்ளுதலை ஆராயாமல் நிச்சயித்தலை அல்லாமல்.
2-3.
தம்முட் கூடியும் நின்னொடு புகைகொண்டோர் சிறிது நேரமும்
தம் தம் நாட்டைக் காத்துக் கொள்ளுதலை மாட்டாராயினார். வறிது - சிறிது;
உரிச்சொல்.
3-7.
நின் குடியில் நினக்கு முன்பு இருந்த அரசர்களுக்குப்
பாதுகாவலைச் செய்தனராகி வாழ்ந்து, மக்களின் தொகுதியைக் காப்பதற்கு
அறிவுரையை வற்புறுத்திக் கூறும், தருமத்தை அறிந்த உள்ளத்தையுடைய
மந்திரிகளைப் போன்ற நின்னுடைய சூழ்ச்சிப்பண்பைத் தம்முடைய அறியாமை
பெரிதாகையால் அப்பகைவர் நன்றாக அறியமாட்டாராயினார்.
8-9.
எல்லாவுயிர்களும் இறக்கும் ஊழிபுகுகின்ற முடிவில், நிலம் பாரம்
நீங்க நீரானது பரக்கும்படி வந்து நெருங்க; ஒரா - ஒருவ; ஈண்டி - ஈண்ட;
எச்சத்திரிபுகள். இது நீரின் ஊழியைக் கூறியது; "பனியொடு தண்பெய
றலைஇய வூழியும்" (பதிற்.
2 - 8 : 9)
10.
உலாவுதலையுடைய அலை விரைந்து சென்ற உயிர்களைக்
கொல்லுதற்குக் கோபித்து எழுகின்ற வெள்ளம்: "உருத்துவரு மலிர்நிறை"
(பதிற்.
28 : 12)
11.
எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில்
இருளொடு சேர்ந்து பரக்க. இருளொடு என ஒடு வருவிக்க.
12. அதனைப்
போக்கச் சூரியர் பன்னிருவரும் தோன்றிய, சேர்ந்து
வரும் கூட்டத்தையுடைய.
கூட்டத்து
(12) மடங்கற்றீ (15) என இயையும்.
13.
அழகிய விழாவைப்போல எல்லார்க்கும் இன்பத்தைச் செய்யும்
நினது தொழிலை ஒழித்து.
1"விழவுமேம்
பட்டவென் னலனே" (குறுந். 125: 4)
|