14-5.
பொங்குகின்ற பிசிரையுடைய வெள்ளத்தை வற்றச்
செய்யும்பொருட்டுச் சிவந்த ஒளி நிகழ்தலையுடைய வரவை என்னும்
ஊழித்தீயைப் போன்றனை; நுடக்கிய: செய்யியவென்னும் வினையெச்சம்.
12-5.
சூரியரோடு கூடிய வடவைத்தீ: பதிற்.
62 : 6 - 8; சூரியர்
படைத்தலைவர்க்கும், வடவைத்தீ சேரனுக்கும் உவமைகள்.
16.
சினம் பொருந்திய குருசிலே, நின்னொடு மாறுபட்ட பகைவருக்கு.
உடற்றிசினோர்க்கு
(16) மடங்கற்றீயின் அனையை (15) என மாறி
இயைக்க.
(பி
- ம்.) 3. நாடென. 4. முதல்வரோம்பினர். 8. துஞ்சலூறும். 14.
பிசிருடக்கிய. (2)
73.
|
உரவோ
ரெண்ணினு மடவோ ரெண்ணினும்
பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப்
பிறருவம மாகா வொருபெரு வேந்தே
........................................................................
........................................................................
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற் |
5
|
செய்யு
ணாரை யொய்யு மகளிர்
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை |
10
|
கழைவிரிந்
தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையநின்
வளனு மாண்மையுங் கைவண் மையும்
மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள்
யான்சென் றுரைப்பவுந் தேறார் பிறரும் |
15
|
சான்றோ
ருரைப்பத் தெளிகுவர் கொல்லென
ஆங்குமதி மருளக் காண்குவல்
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே. |
இதுவும்
அது. பெயர் - நிறந்திகழ் பாசிழை.
(ப
- ரை) 1[கூந்தலையுடைய
மகளிர், ஒண்ணுதல்பொலிந்த
மகளிரெனக் கூட்டுக.
நிறந்திகழ்
பாசிழையென்றது 2தன்னின் அழுத்திய மணியினும் தன்
நிறம் திகழும் பசும்பொன்னிழை யென்றவாறு.
1[
]இவ்விருதலைப் பகரத்திற்கு உட்பட்ட உரைக்குரிய மூலம் ஒரு
பிரதியிலும் கிடைக்கவில்லை.
2"மின்னி, மணிபொரு
பசும்பொன்" (கலித். 143
: 3 - 4)
|