பக்கம் எண் :

212

     இச்சிறப்பானே இதற்கு, 'நிறந்திகழ் பாசிழை' என்று பெயராயிற்று.

     உயிர்திணைமகளிர் நெஞ்சத்துமென உம்மையை மாறிக் கூட்டுக.

     தெய்வமென்றது தெய்வத்தன்மையை.

     தெய்வந்தரூஉம் ஆன்றோரெனக் கூட்டுக. குலமகளிரை உயர் 1திணை
மகளிரென்று முன்னே கூறினமையான் ஆன்றோரென்றது பரத்தையரையாம்;
அவர்களை ஆன்றோரென்றது தம் 2துறைக்கு வேண்டுவன
அமைந்தாரென்றவாறு.] 4. மருதமென்றது மருதநிலத்தன்மையை.

     6-7. இரவும்பகலும் குரவை அயருமெனக் கூட்டுக.

     குறும்பல்குரவையென்றது ஒன்று ஆடும் இடத்திற்கு ஒன்று அணியதாய்
அவைதாம் பலவாயிருக்கின்ற குரவையென்றவாறு.

     குரவையாரும் (7) புகார் (9) எனவும் காவிரி மண்டிய புகாரெனவும்
கூட்டுக.

     14. உரைப்பவுமென்ற உம்மை தாமே அறியக்கடவதனை யாம்
சொல்லவும் அறிகிலரெனச் சிறப்பும்மை. பிறருமென்ற உம்மை அசைநிலை.
'சான்றோர்.........................கொல்லென' என்றதன் பின் கருதினென ஒரு சொல்
வருவித்து அதனைக் காண்குவலென்னும் வினையொடு முடிக்க.

     பெருவேந்தே (3), புகார்ச்செல்வ, பூழியர் மெய்ம்மறை (9), கொல்லிப்
பொருந, பொறைய (11), நின் பகைவர் நின் (11) வளனும் ஆண்மையும்
கைவண்மையும் (12), உலகத்துமக்கள் அளவைக் கடந்தன; அவனோடு
மாறுபடுவது நுமக்கு உறுதியென்றெனப் பன்னாள் (13) யான் சொல்லவும்
தேறிற்றிலர் (14); தேறாராயினும் உலகத்து மதிப்புடைய சான்றோர் சொல்லத்
தாம் தேறுவரோவெனக் கருதின் (15) அவர் சொன்னவிடத்தும் அவர்கள்
மதிமருண்டதுவே காணாநின்றேன் (16); ஆகலான் நின் பெருமையை
அவர்கட்கு யாங்கு உரைப்பேனென வருந்தாநின்றேன் யான் (17); இஃது
என்னுறு குறை; இதனை அறிந்து நீ அவர்பால் அருளவேண்டுவலென
வினைமுடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிக்கு அடியாகிய செல்வமும்
ஆண்மையும் 3கைவண்மையும் உடன் கூறியவற்றான் அவன் வென்றிச்
சிறப்புக் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. உரவோர், மடவோர்; பதிற். 71:25; குறுந். 20 : 3-4.

     உரன் அறிவென்னும் பொருளில் வந்தது (சிறுபாண். 189-90, .)

     1-3. அறிவுடையோரை எண்ணினாலும், அறிவில்லாதோரை
எண்ணினாலும் பிறர்க்கு நீ உவமையாகப் பொருந்தினால் அல்லாமல்,
நினக்குப் பிறரை உவமமாகக் கூறுதற்கு இயலாத ஒப்பற்ற
பெருமையையுடைய அரசே; "உயர்ந்ததன் மேற்றே யுள்ளுங் காலை" (தொல்.
உவம. 3) என்பதனால் உவமையாகக் கூறப்படும் பொருள் உயர்ந்ததாதலின்
சேரனுடைய பெருமை விளக்கப்பட்டது; முருகு. 276; மதுரைக். 42.
.; புறநா. 377 : 10 - 11 என்பவற்றைப் பார்க்க.


     1திணை - குலம்.
     2சிலப், 14 : 166 - 7, ’42 : 138 - 9; மணி, 2 : 18 - 32; பெருங்.
1. 35; 84 - 6.     
     3வென்றிக்கு வண்மை அடியாதல்: ‘அருளிலர் கொடாமைவல்லராகுக
வென்றதனாற் பயன், அவையுடையோர் தத்தம் பகைவரை வெல்வராதலால்,
பகையெதிர்ந்தோர் அவையிலராக என்பதாம்’ (
புறநா, 27 : 17 - 9, உரை)