4. மருதம்
சான்ற வயல்: மதுரைக். 270.
4-5.
ஊடலாகிய உரிப்பொருள் அமைந்த அகன்ற இடத்தையுடைய
விளைகின்ற வயல்களாகிய செய்களில், பயிரை அழிக்கின்ற நாரையைத்
துரத்தும் மகளிர். ஒய்தல்: பதிற்.
29:2-7.
மகளிர் நாரையைத்
துரத்துதல்: பதிற். 29 : 2 - 7.
6-7. பசிய பொன்னாற்செய்த
ஆபரணங்களைக் களைதல் இல்லாதவராகி,
ஒன்றுக்கு ஒன்று அண்மையிலுள்ளதாகி அவைதாம் பலவாயிருக்கின்ற
புதிதுபுதிதான குரவைக் கூத்தை இரவிலும் பகலிலும் நிகழ்த்துதற்கு இடமான.
இரவும் பகலும் அயருமென இயைக்க; 'குறும்பல்லூர் நெடுஞ் சோணாட்டு -
ஒன்றற்கு ஒன்று அண்ணிதாகிப் பலவாகிய ஊர்களையுைடைய பெரிய
சோழநாட்டில' (பட்டினப்.
28, ந.)
9. பூழியர் மெய்ம்மறை:
பதிற். 90 : 27.
8-9. காவிரி
மிக்குச் சென்ற, நெடுந்தூரத்தே விரிகின்ற அழகினையுடைய
புகார் நகரத்தையுடைய செல்வ, பூழிநாட்டிலுள்ளார்க்குக் கவசம் போன்றாய்.
இதனாற் சோழநாடும், பூழிநாடும் இவன் ஆட்சிக்கு உட்பட்டமை தெரிகின்றது.
11. கொல்லிப்பொருந:
புறநா. 22 : 28; சிலப்.
குன்றக்.
பாட்டுமடையிறுதி. 10-11. மூங்கில் விரிந்து எழுகின்ற மேகங்கள் தவழும்
உயர்ந்த சிகரங்களையுடைய கொல்லிமலைக்குத் தலைவ; கொடிகளையணிந்த
தேரையுடைய சேரனே.
11-4.
நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும் மக்களின்
அளவைக் கடந்தனவென்று தாமே அறியவேண்டியவராக
இருந்தும் யான் பலநாள் சென்று நின்பகைவரிடத்துச்
சொல்லவும் அவர் அதனைத் தெளியமாட்டாராயினார்.
14-5. பிறராகிய
சான்றோர் அவற்றை எடுத்துச் சொல்லத் தெளிவாரோ
எனக் கருதினால். பிறரும்: உம்மை அசைநிலை. கொல்லென என்பதன்பின்
கருதினென்பதை அவாய்நிலையால் வருவித்து முடிக்க.
16. அச்சான்றோர்
கூறவும் பகைவரது புத்தி மயங்கக் காண்பேன்.
17. ஆதலால் யான்
எவ்வாறு அவர்மனம் தெளியும் வண்ணம்
உரைப்பேனென்று வருந்துவேன்; இதனை அறிந்து நீ அவர்பால் அருள்
செய்தல் வேண்டும்.
(பி
- ம்) 2. நீயாயின். 5. ஒப்புமகளிர். 8. சேய்வரி. 14. யாஞ்சென்று.
(3)
74. |
கேள்வி
கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச்
சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல்
வேறுபடு திருவி னின்வழி வாழியர் |
5 |
கொடுமணம்
பட்ட வினைமா ணருங்கலம் |
|