பக்கம் எண் :

214

 




பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரையக நண்ணிக் குறும்பொறை நாடித்
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக்
கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற்
 10




புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத்
தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற்
பருதி போகிய புடைகிளை கட்டி
எஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன்
சூடுநிலை யுற்றுச் சுடர்விடு தோற்றம்
 15




விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப
நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள்
ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவில்
எண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து
சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவும்
 20




காவற் கமைந்த வரசுதுறை போகிய
வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க்
கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப
அன்னவை மருண்டனெ னல்லே னின்வயின்
முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை
 25



வண்மையு மாண்பும் வளனு மெச்சமும்
தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென
வேறுபடு நனந்தலைப் பெயரக்
கூறினை பெருமநின் படிமை யானே.

     இதுவும் அது. பெயர் - நலம்பெறு திருமணி. (16)

     (ப - ரை) 1. 1கேள்வி கேட்டல் - யாகம் பண்ணுதற்கு 2உடலான
விதி கேட்டல். படிவம் - யாகம் பண்ணுதற்கு உடலாக முன்பு செலுத்தும்
விரதங்கள். ஒடியாதென்பதை ஒடியாமலெனத் திரிக்க.

     வேட்டனை (2) என்றதனை வினையெச்சமுற்றாக்கி
அவ்வினயெச்சத்தினை அருங்கடனிறுத்த (22) என்னும் வினையொடு கூட்டுக.

     2. உயர்ந்தோர் - தேவர். 4. வேறுபடு திருவின் - இவளுக்குக்
கூறிய குணங்களால் அவளின் வேறாகிய நின்தேவி யென்றவாறு.

     திருவின் என்னும் இன் அசைநிலை. வாழியர் (4) என்னும்
வினையெச்சத்தினைச் சூடுநிலையுற்று (14) என்னும் வினையொடு முடிக்க.

     7. வரையென்றது பெருமலையை. குறும்பொறையென்றது அதனை அணைந்த சிறு பொற்றைகளை.


     1கேள்வியென்றது வேதம்; வேதவிதிக்காயிற்று.

     2உடல் - ஆதாரம்.