8. தெரியுநர்
கோடல் - இலக்கணக் குற்றம் அற ஆராய்ந்து கோடல்.
பைம்பொறியென்றது செவ்விகளையுடைய புள்ளிகளை. மேற் புள்ளியிரலை (10)
என்றதனை அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக் கொள்க.
9. கவலைவென்னும்
அகரம் செய்யுள் விகாரம்.
11.
பாண்டிலென்றது வட்டமாக அறுத்த தோலினை. 12. பருதி போகிய
புடையென்றது வட்டமாகப் போன அத்தோலது விளிம்பினை.
அருங்கலம்
(5) முத்தம் (6) பாண்டிற் (11) புடை கிளை கட்டி (12) எனக்
கூட்டி அருங்கலத்தினையும் முத்தத்தினையும் அத்தோலின் விளிம்பிலே
இனமாகக் கட்டியெனவுரைக்க.
13.
எஃகுடை இரும்பின் உள்ளமைத்தென்றது கூர்மையையுடைய
கருவிகளால் அத்தோலுட் செய்யும் தொழில்களெல்லாம் செய்தமைத்
தென்றவாறு. அமைத்தென்றதனை அமைப்பவெனத் திரிக்க.
வல்லோனால்
(13) என விரித்து வல்லோனால் நின் தேவி சூடுதல்
நிலையுறுதலால் (14) என்க.
13.
வல்லோன் - யாகம் பண்ணுவிக்க வல்லவன்.
14.
தோற்றமென்றது தோற்றமுடைய அத்தோலினை.
திரு
(4) ஒண்ணுதல் (17) தோற்றம் (14) பருந்தூறளப்பச் (15) சூடு
நிலையுற்றுக் (14) கருவில் (17) அரசுதுறை போகிய (20) எனக் கூட்டி நின்
தேவியாகிய ஒண்ணுதல் அவ்வாறிழைத்த தோலினைப் பருந்தூறளக்கும்படி
சூடினமையால், அவள் கருவிலேயிருந்து அரசுதுறைக்கு வேண்டுவன
வெல்லாம் குறையற்றவெனவுரைக்க.
16.
நலம்பெறு திருமணியென்றது மணியறிவாரால் இதுவே நல்லதென்று
சொல்லப்படுதலையுடைய திருமணியென்றவாறு.
இச்சிறப்பானே
இதற்கு 'நலம்பெறு திருமணி' என்று பெயராயிற்று.
18.
எண் இயல் முற்றியென்றது 1திங்கள் நிரம்பியென்றவாறு.
ஈரறிவென்றது
இம்மையறிவு மறுமையறிவு; பெரிய அறிவெனினும்
அமையும்.
21.
பெற்றனையென்றது வினையெச்சமுற்று.
24.
நரைமூதாளனென்றது புரோகிதனை.
நரைமூதாளனைக்
(24) கூறினை (28) எனக் கூட்டி அவனைச் சொல்லி
ஏவினையென ஒரு சொல் வருவித்து முடிக்க.
25.
மாண்பென்றது மாட்சிமையுடைய குணங்களை. எச்சமென்றது
பிள்ளைப்பேற்றினை. 26. தெய்வமென்றது தம்மால்வழிபடும் தெய்வத்தினை.
தவமுடையோர்க்கெனச்
(26) சொல்லி (28) என்க.
கூறினையென்பது
வினையெச்சமுற்று.
27.
வேறுபடு நனந்தலையென்றது துறந்துபோயிருக்கும் காட்டினை.
பெயர்
- அந்நரைமூதாளனைக் காட்டிலே பெயரவேண்டி.
செருப்புகன்
முன்ப (22), வேட்டனையென்றும் (2) பெற்றனையென்றும்
(21) நீ செய்த யாகங்களாகிய அன்னவையிற்றிற்கு (2) யான் மருண்டேனல்லேன்
(23); நின்னை நல்வழி ஒழுகுவித்து நின்ற நரைமூதாளனை (24) நின்
படிமையானே (28) இல்லறவொழுக்கினை ஒழித்துத் துறவற வொழுக்கிலே
செல்ல (27) ஒழுகுவித்தனை (28); அவ்வாறு செய்வித்த
நின்போரொழுக்கத்தையும் பேரறிவினையும் தெரிந்து யான் மருண்டேனென
வினைமுடிவு செய்க.
1“நாளுற்று
நம்பி பிறந்தான்” (சீவக,
10)
|