பக்கம் எண் :

216

     இதனாற் சொல்லியது அவன் நல்லொழுக்கமும் அதற்கேற்ற
நல்லறிவுடைமையும் கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. வேதவிதிகளைக் கேட்டு யாகத்திற்கு அங்கமாகச்
செய்யப்படும் விரதங்களில் தவிராமல். ஒடிதல் - தவிர்தல்; "ஒடியா விழவி
னெடியோன் குன்றத்து" (அகநா. 149 : 16)

     2. தேவர்கள் உவக்கும்படி யாகங்களைச் செய்து முடித்தனையாய்.
அரசர் வேள்வி செய்தல்: பதிற். 21 : 1-6; "ஆன்ற கேள்வி யடங்கிய
கொள்கை, நான்மறை முதல்வர் சுற்ற மாக, மன்ன ரேவல் செய்ய மன்னிய,
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே" (புறநா. 26 : 12 - 5)

     3. நுண்ணிய கருமணலைப் போன்ற புறத்தே தாழ்ந்த பெரிய கூந்தலையுடைய; "புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பால்" (அகநா. 126 : 20)

     4. தெய்வமாகிய திருமகளினின்றும் வேறாகிய நின் தேவி நின்வழியிலே
வாழும்பொருட்டு. திருவின்: இன் வேண்டாவழிச் சாரியை. வாழியர்:
வினையெச்சம். 5 - 6. கொடுமணம் என்னும் ஊரில் உண்டான தொழில்
மாட்சிமைப்பட்ட அரிய ஆபரணங்களையும், பந்தர் என்னும் ஊரில் விளைந்த
பலரும் புகழ்கின்ற முத்துக்களையும். கொடுமணக்கலமும் பந்தர்முத்தமும்:
பதிற்
. 67 : 1 - 4.

     7. பெருமலையினிடத்தே சென்று சிறிய பொற்றைகளில் தேடி.

     8. ஆராய்பவராகிக் கொண்ட சிதறுதலையுடைய செவ்விய
புள்ளிகளையுடைய. சிரறுதல் - சிதறுதல் (பதிற். 22 : 13. உரை)

     9. கலையின் மருப்புக்குக் கவைமரம்: அகநா. 34 : 3 - 4.

     9-10. கவைக்கோலைப் போன்ற பிளவுப்பட்ட கொம்பினையுடைய
புள்ளிமானினது தோலை, ஊனை ஒழித்து.

     11. தீய பாகத்தைக் களைய எஞ்சிய ஒளிவிடுகின்ற தோலினது.

     12. வட்டமாகப் போன விளிம்பிலே இனமாகக் கட்டி.

     பருதியென்னும் சொல் வட்டமென்னும் பொருளில் வரும்
(சீவக. 2203, ந.)

     அருங்கலத்தையும் (5) முத்தத்தையும் (6) கட்டி (12) என இயைக்க.

     13. கூர்மையையுடைய இரும்பினாற் செய்யப்பட்ட கருவிகளால் அத்தோலுட் செய்யும் தொழில்களையெல்லாம் செய்து அமைப்ப, யாகம்
செய்விக்க வல்லோனால். அமைத்து - அமைப்ப; எச்சத்திரிபு.

     14. சூடுதல் நிலையுற்றதனால் ஒளிவிடுகின்ற தோற்றமுடைய
அத்தோலை.

     7-14. யாகஞ் செய்வோர் மான்றோலைப் போர்த்துக்கொள்ளுதல்;
"வினைக்குவேண்டி நீ பூண்ட, புலப்புல்வாய்க் கலைப்பச்சை, சுவற்பூண் ஞாண்
மிசைப்பொலிய" (புறநா. 166 : 10 - 12); "கடகரி யுரிவை போர்த்த கண்ணுதற்
கடவுண்மாறி, இடம்வல மாகப் பாகத் திறை வியோடிருந்த வாபோல்,
உடல்கலை யுறுப்புத் தோலி னொளித்திடப் போர்த்து வேள்விக், கடனினுக்
குரிய வெல்லாங் கவினுறச் சாத்தினானே" (வி. பா. இராசசூயச். 104)

     15. ஆகாயத்தில் ஆடுகின்ற இயல்பையுடைய பருந்து இறைச்சி யென்று
கருதி அதனிடத்தே உறுதலைக் கருத.