16-7.
மணிகளுக்கு உரிய இலக்கணங்களைப் பெற்ற அழகிய மணி
சேர்ந்த நல்ல தோளையும், சுருள் என்னும் பகுதியான கூந்தலையும். ஒள்ளிய
நெற்றியையும் உடைய நின் தேவியினது கருவில்.
18.
பத்து மாதமும் நிரம்பி, பேரறிவை விரும்பி.
19.
அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் வாய்மையும் நடுவு
நிலையும் உளப்படப் பிற குணங்களும் ஆகிய.
21.
வீறுசால் புதல்வன்: புறநா. 222 : 2 - 3.
20-21.
குடிகளைக் காத்தற்குப் பொருந்திய அரசின் துறைகளை முற்றக்
கற்ற, வேறொருவர்க்கு இல்லாத சிறப்பு அமையப்பெற்ற புதல்வனைப்
பெற்றனையாய். அரசுதுறை போகிய என்பது "அறிவறிந்த மக்கட்பேறு" (குறள்,
61) என்புழி அறிந்த என்பதுபோல நின்றது.
21-2.
இவ்வுலகத்திலுள்ளார்பொருட்டு அரிய கடனைச் செய்து முடித்த,
போரை விரும்புகின்ற வன்மையுடையோய். தேவர்கடன், முனிவர் கடன்,
பிதிரர்கடன் என்னும் இல்லறத்தார்க்குரிய கடன்கள் மூன்றனுள், பிதிரர்கடன்
புதல்வரைப் பெறுதலால் தீர்தலின் அருங்கடனிறுத்த என்றார் (பதிற்.
70 : 21 - 2)
குலந்தருதல்
- புதல்வற் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல்
என்பதற்கு மேற்கோள் (சீவக. 2141,
ந.)
வேட்டு
(2), பெற்று (21), இறுத்த (22) என்க:
23.
வேட்டதும், புதல்வற் பெற்றதும் ஆகிய அத்தகையவற்றைக்
கேட்டு வியந்தேன் அல்லேன்.
23-4.
நின்னிடத்து, அறம் முழுவதையும் நன்றாக அறிந்து நின்னை
நல்ல வழியிலே நடத்தும் பிராயம் முதிர்ந்தோனாகிய புரோகிதனை.
25-6.
கொடுத்தாலும், மாட்சிமையுடைய குணங்களும் செல்வமும்,
பிள்ளைப்பேறும், தம்மால் வழிபடப்பெறும் தெய்வமும், மற்ற எல்லாப்
பொருளும் தவமுடையயோர்க்கு உரியன எனச் சொல்லி.
27-8.
பெருமானே, வேறுபட்ட அகன்ற இடத்தையுடைய காட்டிலே
நீங்கும்படி நின்னுடைய தவவேடத்தால் ஏவினை; என்றது தன் புரோகிதனைக்
காட்டிலும் சேரன் அறிவுமிக்கமை கூறியபடி; "புரோசு மயக்கி" (பதிற்.
7-ஆம்
பத்தின் பதிகம்: 10, உரை)
ஆதலால்
நின் தவவொழுக்கத்தையும் பேரறிவையும் கண்டு
வியந்தேனென இசையெச்சமாகச் சில சொற்களை வருவித்து முடிக்க.
மு
. அரசன் ஓதியவாறும் வேட்டவாறும்
வந்தன (தொல்.புறத்.20,ந);
அரசர்க்குரியவாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும்
புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதி
(தொல். புறத். 21, ந.)
(பி
- ம்) 8. தெரிபுகொண்ட. 10. தோலூனொதிரத்து. 14. சூடு
நிலையுற்ற. 24. முதிதுணர்ந்தொழுகும். 25. வண்மையுமாண்மையும். 27.
வேறுபுல. 28. கூறுவை. (4)
75. |
இரும்புலி
கொன்று பெருங்களி றடூஉம்
அரும்பொறி வயமா னனையை பல்வேற் |
|