5-7. நெல் மிக்கு
வளர அறுத்தலுற்ற கரும்பினது இனிய பாகின்
இடையறாத வருவாயை, அவ்விடத்தே வருபவர்க்கு வரையாமல் வீசும்
செல்வம் மிக்க குடியிருப்பையுடைய. நெல்லும் கரும்பும் நிலவளத்தைப்
புலப்படுத்துவன. கரும்பாலையிற் சாற்றை வழங்கல்; "விசய மடூஉம் புகைசூ
ழாலைதொறும், கரும்பின் றீஞ்சாறு விரும்பினிர் மிசைமின்" (பெரும்பாண்.
261 - 2)
8. காட்டைத்
தம் இருப்பிடமாகக் கொண்டு, மருத நிலங்கள் தோறும்.
மென்பால் பின்வரும் நாட்டிற்குச் (14) சினை.
9. அரிய
பறையையுடைய தொழில் செய்வோர், புல்லிய போரிலே
பகைவரைத் தோல்விடையச் செய்து அவர் பாற் பெற்ற பொருள்களை.
10.
கள்ளை விற்றலையுடைய கடைத் தெருவில் சிறந்த விலையின்
பொருட்டுக் கொடுக்கும்.
விலை
கொடுக்கும் (10) நாடு (14) என இயையும்.
11.
கவடி வித்துதற்கு உழுத குடைவேலையுடைய கரம்பை
நிலத்திலிருத்தலே யன்றி. வெள்வரகும் கொள்ளும் வித்தல்: புறநா.
392 : 10;
பு. வெ. 120.
12-4. செந்நெல்லாகிய
உணவை அறியாராய்த் தங்கள் தங்களுடைய,
பாடல் அமைந்த ஊர்களையுடைய நாடுகளை ஒருங்கு ஆளுதல் அவர்க்கு
எங்கேயுள்ளது?
குடியிருப்பையுடைய
(7) மென்பால்தோறும் (8) விலைகொடுக்கும் (10)
வைப்பின் (13) நாடு (14) என இயைக்க.
நின் வழிப்படாஅராயின்
(5) நாடுடன் ஆளுதல் யாவணது (14) என்க.
(பி
- ம்.) 8. தழீஇய மென்பால். 11. கல்லுடைக் கரம்பை.
9. புலவிகல்
படுத்து. 12. அறியாருடன. (5)
76.
|
களிறுடைப்
பெருஞ்சமந் ததைய வெஃகுயர்த்
தொளிறுவாண் மன்னர் துதைநிலை கொன்று
முரசுகடிப் படைய வருந்துறை போகிப்
பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும் |
5
|
பண்ணிய விலைஞர் போலப் புண்ணொரீ இப்
பெருங்கைத் தொழுதியின் வன்றுயர் கழிப்பி
இரந்தோர் வாழ நல்கி யிரப்போர்க்
கீத றண்டா மாசித றிருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு |
10
|
கருவி
வானந் தண்டளி சொரிந்தெனப்
பல்விதை யுழவிற் சில்லே ராளர்
பனித்துறைப் புகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி |
|