பக்கம் எண் :

22

12. வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பி னரசுதலை பனிப்பக்
கடம்புமுத றடிந்த கடுஞ்சின வேந்தே
தாரணி யெருத்தின் வாரல் வள்ளுகிர்
  5 அரிமான் வழங்குஞ் சாரற் பிறமான்
தோடுகொ ளினநிரை நெஞ்சதிர்ந் தாங்கு
முரசுமுழங்கு நெடுநக ரரசுதுயி லீயாது
மாதிரம் பனிக்கு
மறம்வீங்கு பல்புகழ்
கேட்டற் கினிதுநின் செல்வங் கேட்டொறும
  10 காண்டல் விருப்பொடு கமழுங் குளவி
வாடாப் பைம்மயி ரிளைய வாடுநடை
அண்ணன் மழகளி றரிஞிமி றோப்பும்
கன்றுபுணர் பிடிய குன்றுபல; நீந்தி
வந்தவ ணிறுத்த விரும்பே ரொக்கற்
 15 றொல்பசி யுழந்த பழங்கண் வீழ
எஃகுபோழ்ந் தறுத்த வானிணக் கொழுங்குறை
மையூன் பெய்த வெண்ணெல் வெண்சோறு
நனையமை கள்ளின் றேறலொடு மாந்தி
நீர்ப்படு பருந்தி னிருஞ்சிற கன்ன
 20 நிலந்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ
வணரிருங் கதுப்பின் வாங்கமை மென்றோள்
வசையின் மகளிர் வயங்கிழை யணிய
அமர்புமெய் யார்த்த சுற்றமொடு
 21 நுதர்தற் கினிதுநின் பெருங்கலி மகிழ்வே.

     இதுவுமது. பெயர் - மறம்வீங்கு பல்புகழ் (8)
     
     (ப - ரை)
7. துயிலீயாதென்பது துயிலாதென்னும் வினைத்திரி சொல்;
துயிலாமலெனத் திரிக்க; இனித்திரியாது, 'யாறுநீ ரொழுகாது கிடந்தது' என்னும்
வழக்குப்போல இடத்து நிகழ்பொருளின் தொழிலை இடத்திற்கேற்றி,
மாதிரமானது அரசு துயிலீயாது பனிக்குமென அம்மாதிரத்தின் வினையொடு
முடிப்பினும் அமையும்.

     8. மறம்வீங்கு பல்புகழென்றது அரசர்க்குச் சிறந்த மறப்புகழ் 1மற்றைப்
புகழினும் மிக்க பல்புகழென்றவாறு.
    
     இச்சிறப்பானே இதற்கு, 'மறம்வீங்கு பல்புகழ்' என்று பெயராயிற்று.

     1மற்றைப்புகழ் - கல்வி, ஈகை முதலியவற்றால் வரும் புகழ்.