பக்கம் எண் :

220

இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
 15 அகன்கண் வைப்பி னாடுகிழ வோயே.

 

     இதுவும் - அது. பெயர் - மாசிதறிருக்கை (8)

     (ப - ரை) 4. கடல் நீந்திய மரம் - மரக்கலம்.

     8. மா சிதறு இருக்கையென்றது பகைவரிடத்துக் கொள்ளப்பட்ட
மாக்களை வரையாது அளவிறக்கக் கொடுக்கும் பாசறையிருக்கை யென்றவாறு.

     இச்சிறப்பானே இதற்கு, 'மாசித றிருக்கை' என்று பெயராயிற்று.

     தண்டளி சொரிந்தென (10) ஏராளர் (11) கதிர்த்திருமணி பெறூஉம்
(14) நாடு (15) எனக்கூட்டி, மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக்
கோடலேயன்றி உழுத இடங்கள்தோறும் ஒளியையுடைய திருமணிகளை
எடுத்துக் கொள்ளும் நாடென வுரைக்க.

     11. பல் விதை உழவின் சில்லேராளரென்றது பல விதையுழவாற்
பெரியராயிருப்பினும் தம் குலத்தானும் ஒழுக்கத்தாலும் சிறிய
ஏராளரென்றவாறு.

     சின்மையை, 1சின்னூலென்றதுபோல ஈண்டுச்சிறுமையாகக் கொள்க.

     பகன்றைத் தெரியல் (12) கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடித் (13)
திருமணி பெறூஉம் (14) எனக் கூட்டி, பகன்றைமாலையைக் கழுவுறு கலிங்கம்
ஒப்பச் சூடிக்கொண்டு நின்று தி'ருமணிகளை எடுக்குமெனவுரைக்க.

     நாடுகிழவோய் (15), மன்னர் (2) பெருஞ்சமம் ததைய எஃகுயர்த்து (1)
அம்மன்னர் பலர் கூடிச் செறிந்த நிலைமையைக் கொன்று (2) அருந்துறை
போகிக் (3) கடலை நீந்தின மரக்கலத்தினை அழிவுசேராது வலியுறுக்கும் (4)
பண்டவாணிகரைப் போலக் (5) கைத்தொழுதியின் (6) புண்ணை ஒருவுவித்து
(5) வலியதுயரைக் கழித்துப் போரிடத்து வினையிலிருத்தலே 2வினோதமாகக்
கொண்டு (6) இரந்தோர் வாழ நல்கிப் பின்னும் இரப்போர்க்கு (7) ஈதலின்
மாறாத மாசித றிருக்கையைக் (8) கண்டுபோவேன் வந்தேன் (9) எனக் கூட்டி
வினை முடிவு செய்க.

     இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும்
கூறியவாறாயிற்று.

     (கு - ரை) 1. ஆண்யானைகளையுடைய பெரிய போர் சிதைதலால்
வேலையுயர்த்து. வென்றபின் வேலை உயர்த்தல்: புறநா. 58 : 29; பு. வெ.
199,

     2. விளங்குகின்ற வாளையுடைய அரசர் தம்மில் ஒன்றுகூடின நிலையை
அழித்து. 3. வெற்றிமுரசு குறுந்தடியால் அடிக்கடிப்படுதலை அடையும்படி
அரிய போர்த்துறையை முடித்து.

     4-5. பெரிய கடலில் நீந்திய மரக்கலத்தைப் பழுதுபார்த்து அதற்கு
வன்மையைச் சேர்க்கும், பண்டங்களை விலைக்கு விற்கும் வாணிகரைப்
போலப் புண்ணை ஒருவுவித்து. ஒரீஇ: பிறவினைப் பொருளில் வந்தது.


     1சின்னூல் - நேமிநாதம்; "சின்னூ லுரைத்த குணவீர பண்டிதன்"
(தொண்டை மண்டல சதகம்)

     2வினோதம் - பொழுது போக்கு.